ஹீரோ மோட்டோகார்ப் விலக்கி கொள்ள இருக்கும் 4 மாடல்கள் - முழு விவரம்

By Ravichandran

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், விரைவில் 4 மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஹீரோ மோட்டோகார்ப் விலக்கி கொள்ளும் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியாவை மையமாக கொண்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான், உலகின் முன்னோடி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ளது.

இந்நிறுவனம், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து 2 சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது. சில ஆண்டுகளாக, இந்த இரு நிறுவங்களும் ஒருங்கிணைந்து செய்து வந்த வாகன உற்பத்தியை நிறுத்தி கொண்டுவிட்டன.

குறிக்கோள்;

குறிக்கோள்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விலக்கி கொள்ளப்படும் மாடல்கள்;

விலக்கி கொள்ளப்படும் மாடல்கள்;

இந்தியாவை மையமாக இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இம்பல்ஸ், இக்னைட்டர், பேஷன் எக்ஸ்ப்ரோ மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய மாடல்களை விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளது.

விலக்கி கொள்வதற்கான காரணங்கள்;

விலக்கி கொள்வதற்கான காரணங்கள்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த 4 மாடல்களை விலக்கி கொள்வதற்கான முக்கிய காரணமே, இந்த மாடல்களுக்காக இந்நிறுவனம், ஹோண்டாவிற்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்பின் தயாரிப்பு;

ஹீரோ மோட்டோகார்ப்பின் தயாரிப்பு;

சமீபத்தில் தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தாங்களே முழுக்க முழுக்க சொந்தமாக உருவாக்கிய சில ஸ்கூட்டர் மற்றும் மோட்டர்சைக்கிள்களை அறிமுகம் செய்தனர்.

மேஸ்ட்ரோ, டூயட் மற்றும் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 ஆகிய மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே சொந்தமாக தயாரித்து வெளியிட்டுள்ளது.

பிற மாடல்கள்;

பிற மாடல்கள்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பல்வேறு புதிய மாடல்களை இந்திய வாகன சந்தைகளிலும், சர்வதேச வாகன சந்தைகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஹோண்டா இஞ்ஜினில் இயங்கும் மாடல்கள்;

ஹோண்டா இஞ்ஜினில் இயங்கும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், ஹீரோ பிளஷர் மாடல் மட்டுமே ஹோண்டாவின் இஞ்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது.

தற்போது, டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய மாடல்களில் உபயோகிக்கப்படும் இஞ்ஜின் ஹீரோ பிளஷர் மாடலில் பொருத்தபட்டால், இந்த பிரச்னை தீர்ந்துவிடும்.

மேலும், புதிய ரேஞ்ச் ஸ்கூட்டர்களுக்கு, புதிய இஞ்ஜின் தேர்வுகள் பொருத்தப்படுவது குறித்து யோசனைகள் நடைபெற்று வருகிறது.

மறு பிரவேசம் செய்யும் மாடல்கள்;

மறு பிரவேசம் செய்யும் மாடல்கள்;

விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் இருந்து, ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ மாடல் மீண்டும் மறு பிரவேசம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 மாடலில் உள்ள அதே இஞ்ஜின் தான், இந்த ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ-வில் பொருத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மறு பிரவேசம் செய்யப்படாத மாடல்கள்;

மறு பிரவேசம் செய்யப்படாத மாடல்கள்;

குறைந்த விற்பனை பிரச்னையில் உள்ளதால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இம்பல்ஸ் மற்றும் இக்னைட்டர் ஆகிய மாடல்களை மறு அறிமுகம் செய்யாது என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இக்னைட்டர் தொடர்புடைய செய்திகள்

மேஸ்ட்ரோ தொடர்புடைய செய்திகள்

ஸ்பிளென்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hero MotoCorp is among top-sellers of two-wheelers in Indian market. Now, four of their models will be phased out from production to make way for new two-wheelers. Hero MotoCorp will be phasing out their Impulse, Ignitor, Passion XPro, and Maestro models. Another reason for phasing out models is that, Hero MotoCorp has to pay royalty fee to Honda. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X