ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தனர்.

ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ என்ஒய்எக்ஸ்...

ஹீரோ என்ஒய்எக்ஸ்...

ஹீரோ என்ஒய்எக்ஸ் (NYX) எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமீபத்திய தயாரிப்பு ஆகும்.

ஹீரோ எலக்ட்ரிக் என்பது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவு ஆகும்.

இந்த ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இணைய வழி வர்த்தக நிறுவனமான பேடிஎம்-மில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டார்;

மோட்டார்;

ஹீரோ என்ஒய்எக்ஸ் 250W பிரஷ்லெஸ் DC(BLDC) (250W Brushless DC(BLDC)) எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு, 48V-20AH பேட்டரி மூலம் பவர் கடத்தபடுகிறது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

ஒரு முறை முழுமையாக சிங்கிள் சார்ஜிங் செய்தால், 70 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என ஹீரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஆராய் அமைப்பு ஒப்புதலின் படி, ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உச்சபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

சீட் அமைப்பு;

சீட் அமைப்பு;

ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழக்கமாக 2 பேர் பயணம் செய்யலாம்.

அப்படி இல்லையென்றால், பின் சீட்டை மேலாக நோக்கியவாறு தூக்கி, முன் சீட்டில் செல்பவர்கள், பேக்ரெஸ்ட் போல் மாற்றி அமைத்து கொள்ளலாம். மிச்சம் இருக்கும் இடத்தை கூடுதல் லக்கேஜ் வைத்து கொள்ளவும் உபயோகித்து கொள்ளலாம்.

இட வசதி;

இட வசதி;

ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், வழக்கமான அன்டர்சீட் ஸ்டோரேஜ் (underseat storage) எனப்படும் சீட்டுக்கு அடியிலும், பிற ஸ்கூட்டர்களில் உள்ளது போல், முன் பக்கத்தில் கிளவ்பாக்ஸ் போன்ற ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

தற்போதைய நிலையில், ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், வைட் மற்றும் கிரே ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது. மூன்றாவதாக ரெட் வண்ணத்திலும், விரைவில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதுள்ள பெயிண்ட் ஆனது, ஸ்கிராட்ச் தாங்கும் (scratch proof) தன்மை கொண்டுள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஆண்டி-தெஃப்ட் அலாரம், 2 வருடங்கள் வாரண்டி மற்றும் உற்பத்தி நிறுவனம் வழங்கும் 1 வருட ரோட் சைட் அசிஸ்டன்ஸ் ((ஆர்எஸ்ஏ) (one-year roadside assistance plan) ஆகிய சிறப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

உலக சுற்றுசூழல் தினம் (World Environment Day) ஜூன் 5-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஜூன் 5 முதல் இந்தியா முழுவதும் 15 நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை;

விலை;

ஹீரோ என்ஒய்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 29,990 ரூபாய் என்ற (ஆன்-ரோட் சண்டிகர்) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

English summary
Hero Electric, Electric vehicle arm of Hero Motocorp, has launched their Hero NYX Electric scooter on e-commerce site Paytm. Hero NYX is currently available in two colours, white and grey. Soon, it is expected to be available in Red also. Hero NYX Electric Scooter is priced at Rs. 29,990, on-road, Chandigarh. NYX will run 70 kilometers on single charge. To know more, check here...
Story first published: Sunday, June 5, 2016, 7:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more