ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 3 பெர்ஃபார்மன்ஸ் பைக்குகள் வர வாய்ப்பு

Written By:

இந்த ஆண்டில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 2016-ல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள 3 பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

3 புதிய பைக்குகள் அறிமுகம்;

3 புதிய பைக்குகள் அறிமுகம்;

2016-ஆம் ஆண்டுக்காக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒன்று அல்ல, மூன்று பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

இந்த 3 பைக்குகளும், இந்திய சந்தைகளில் இந்த ஆண்டே அறிமுகம் செய்யபட உள்ளது. இது குறித்து, இந்த உற்பத்தி நிறுவனம் எந்த விதமான அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. எனினும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்பாக முறையான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

2014 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது;

2014 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது;

முன்னதாக, ஹெச்எக்ஸ்250ஆர் மற்றும் ஹஸ்தர் மாடல்களை, 2014 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிபடுத்தபட்டது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளின் தொழில்நுட்ப பார்ட்னராக எரிக் புல் ரேசிங் நிறுவனம் விளங்கியது.

துரதிர்ஷ்ட வசமாக, எரிக் புல் ரேசிங் நிறுவனம் திவால் ஆனதால், இந்த மோட்டார்சைக்கிள்களின் அறிமுகம் தாமதமானது.

கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு;

கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் இந்த பெர்ஃபார்மன்ஸ் பைக்குகள் குறித்த குறித்த கூடுதல் தகவல்கள் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஹெச்எக்ஸ்250ஆர் மோட்டார்சைக்கிளையும், உற்பத்திக்கு மிக நெருக்கமான நிலையில் உள்ள ஹஸ்தர் மோட்டார்சைக்கிளையும், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

புதிய ஆராய்ச்சி மையம் திறப்பு;

புதிய ஆராய்ச்சி மையம் திறப்பு;

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உருவாக்கபட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தை இந்த நிறுவனம் திறக்க உள்ளது.

இந்த ஆர் அண்ட் டி மையத்தின் முறையான திறப்பு விழா ஜனவரி 14, 2016-ல் நிகழ உள்ளது. வருங்கால மாடல்களை உருவாக்குவதற்கு என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சார்பாக 450 கோடி ரூபாய் முதலீடு செய்யபட்டுள்ளது.

செக்மண்டில் முன்னோடியாக விளங்குமா?

செக்மண்டில் முன்னோடியாக விளங்குமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கபடும் இந்த 3 புதிய பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளும், இதன் செக்மண்ட்-டில் முன்னோடியாக விளங்க நோக்கம் கொண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் பெர்ஃபார்மன்ஸ் பைக்குகள் மூலம் புதிய செக்மண்ட்டில் நுழையும் திட்டங்களில் இல்லை என தெளிவுபடுத்தபட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Hero MotoCorp has decided to introduce three Performance Bikes for the year 2016. These new bikes are expected to be introduced in the Indian market in 2016 itself. Hero MotoCorp might be showcasing a production ready HX250R and a very close to production ready version of Hastur motorcycle in 2016 Auto Expo.
Story first published: Tuesday, January 5, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark