ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், ஜூலை 14-ல் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரித்து வழங்கும், ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், இந்தியாவில் ஜூலை 14-ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110...

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110...

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரித்து வழங்கும் பைக் ஆகும்.

இது முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கை மேலும் சிறந்ததாக மாற்ற, இதில் பல புதிய மற்றும் பிரத்யேக அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், சிங்கிள் சிலிண்டர் உடைய 110 சிசி ஏர் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 9 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், அமோகமான மைலேஜ் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு அதிகப்படியாக 87 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம்;

ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் எரிபொருள் திறனை கூட்டும் வகையில், ஒரு புதிய ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

i3s டெக்னாலஜி (i3s technology) எனப்படும் இந்த தொழில்நுட்பம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தாலேயே உருவாக்கபட்டதாகும். இதனால், ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110, மேம்பட்ட பெர்ஃபார்மன்ஸ் மற்றும் மைலேஜ் வழங்குகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, தற்போது வெளியாக உள்ள ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் போன்றே காட்சியளிக்கிறது.

கூடுதல் வண்ணங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட உள்ளதால், இந்த பைக் பிரிமியம் மற்றும் தனித்தன்மையான தோற்றம் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில், ட்ரிப் மீட்டர், ஃப்யூவல் லெவல் காண்பிக்கும் புதிய எல்சிடி டிஸ்பிளே மற்றும் ஓடோமீட்டர் சேர்க்கபட்டுள்ளது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் பல்வேறு வேரியன்ட்கள் அறிமுகம் செய்ய உள்ளனர்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கும் இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், இன்னும் சில தினங்களில், ஜூலை 14-ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்ப்பார்க்கப்படும் விலை;

எதிர்ப்பார்க்கப்படும் விலை;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், சுமார் 55,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பட்ஜெட் விலையில் டாப்-5 பைக்குகள் - முழு விவரம்

ஸ்பிளென்டர் தொடர்புடைய செய்திகள்

ஹீரோ மோட்டோகார்ப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hero MotoCorp will launching an all-new motorcycle called Hero Splendor iSmart 110 Bike on July 14th, 2016 in Indian market. Earlier, Splendor iSmart 110 motorcycle was showcased at 2016 Delhi Auto Expo. New Start/Stop system named i3S Technology will be added to engine, which will further improve fuel efficiency and better performance. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X