ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110...

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110...

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய 2 சக்கர வாகனம் ஆகும்.

இது, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கை தவிர்த்து பல்வேறு பிற வாகனங்களும் காட்சிபடுத்தபட்டது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், இந்திய வாகன சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இவை முறைப்படி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி, ஷோரூமில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், 110சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 8.98 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

i3S தொழில்நுட்பம்;

i3S தொழில்நுட்பம்;

i3S தொழில்நுட்பம்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில், புரட்சிகரமான ஐ3எஸ் (i3S) தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டுள்ள i3S தொழில்நுட்பம், இதன் கிளாஸ்ஸில் சிறந்த மைலேஜ் வழங்க உதவுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இதற்காக காப்புரிமையும் (பேடன்ட்) பெற்றுள்ளது.

இதன் ரேஞ்ச்சில், i3S தொழில்நுட்பம் கொண்டுள்ள ஒரே பைக்காக, ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் மட்டுமே விளங்குகிறது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

வழக்கமான ஹீரோ ஸ்பிளென்டர் மாடல்களை காட்டிலும், இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் டிசைன் மற்றும் அம்சங்கள் விஷயத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கிற்கு பொருத்தப்பட்டுள்ள புதிய அல்லாய் வீல்கள், டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்குகள், ஹைட்ராலிக் ரியர் ஷாக்ஸ், டிரம் பிரேக்குகள் உள்ளிட்ட பல விஷயங்கள், இதற்கு கூடுதலாக மவுசு கூட்டுகிறது.

விலை;

விலை;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் அறிமுகம் செய்யப்படும் போது, சுமார் 54,000 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Pics Credit ; www.gaadiwaadi.com

English summary
Spy Pics of Hero Splendor iSmart 110 bike presented by Hero MotoCorp was released recently. This bike is to launch in India soon. Prior to this, Hero MotoCorp Dealerships receive their Splendor iSmart 110 Bike. Spy Pics of such bike is revealed now. This Bike has i3S technology from Hero MotoCorp, which helps in providing best in class mileage efficiency. To know more, check here...
Story first published: Friday, July 1, 2016, 16:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark