ஹீரோ மோட்டோகார்ப்பின் அலுவல் இணையதளம் மூலமாகவும் வாகனங்கள் வாங்கலாம்

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் அலுவல் ரீதியான இணையதளம் மூலமாகவும் புக்கிங், விற்பனை நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான், இந்தியாவிலேயே அதிக அளவில் இரு சக்கர வாகனங்களை தயாரித்து வழங்கும் நிறுவனமாக உள்ளது. முன்னதாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை ஸ்னாப்டீல் என்ற இணைய வழி விற்பனை நிறுவனம் மூலம் மேற்கொண்டு வந்தனர்.

hero-motocorp-starts-booking-of-bikes-scooters-on-their-official-website

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தாங்கள் வழங்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களின் புக்கிங் மற்றும் விற்பனையை தங்களின் அலுவல் ரீதியான இணையதளம் மூலமாகவும் மேற்கொள்ள துவங்கியுள்ளனர். ஸ்னாப்டீல் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் அலுவல் ரீதியான இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கையானது, விற்பனை நடவடிக்கைகளை மேலும் எளிமைபடுத்துவதற்காக என்று கூறப்படுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை, ஹீரோ நிறுவன இணையதளத்தில் வாங்க, ஹீரோ நிறுவன அலுவல் ரீதியான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பிறகு, மற்ற இணையதளங்களில் உள்ளது போல், உங்களுடைய சில தகவல்களை நிரப்பி ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். கூடுதலாக, உங்களின் ஏதாவது ஐடி சான்று (Id proof) வழங்க வேண்டும்.

ரெஜிஸ்டர் செய்த பின், உங்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் (Username and Password (after registering)) நிரப்ப வேண்டும். அதன்பின் உங்களுக்கு பிடித்த வாகனத்தை தேர்வு செய்து கொள்ளவும். கூடவே, புக்கிங் தொகையான 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

இவ்வாறாக, உங்களின் புக்கிங் நடைமுறை முடிந்தபின், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், நீங்கள் புக்கிங் செய்த வாகனத்திற்கான டெலிவரி தொடர்பான தகவல்கள் அனுப்பப்படும். அதன் பின், நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள ஷோரூம் சென்று உங்கள் வாகனத்தை டெலிவரி செய்து கொள்ளலாம்.

தற்போது, வாகனங்கள் புக்கிங், விற்பனை தேர்வுகள் மட்டுமே கூடியுள்ளது என்றும், மற்றப்படி வாரண்டி வசதிகள், சர்வீஸ் ஸ்டேஷன்கள், டெலிவரி நடைமுறை உள்ளிட்ட அனைத்துமே, ஷோரூம்கள் மூலம் வாகனங்கள் வாங்கும் பாரம்பரியமான முறைகளை போலவே தொடரும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Hero MotoCorp - India's largest manufacturer of two-wheelers started accepting bookings for new Hero two-wheelers via their own website. Hero currently sells its two-wheelers online through Snapdeal and will continue to do so. After logging in with their username and password (after registering), user just has to choose vehicle of his or her choice, pay booking amount of Rs. 5,000...
Story first published: Wednesday, June 8, 2016, 8:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark