Just In
- 14 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
30 சீட்தான் தர முடியும்.. அமித்ஷாவிடம் சப்ஜாடாக சொன்ன எடப்பாடியார்.. பாஜக அப்செட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விவரங்கள் வெளியாகியது
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், தாங்கள் தயாரித்து வழங்கும் லித்தியம் இயான் பேட்டரி பேக் கொண்ட ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது. இதன் விலை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ்...
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் என்பது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவு ஆகும்.
இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஏராளமான வாகனங்களை வழங்கி வருகிறது.
இவற்றில், இந்திய வாகன சந்தைகளில், இந்தியாவின் முதல் லித்தியம் இயான் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

முக்கிய அனுகூலம்;
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்பதன் முக்கியமான அனுகூலமே, இதன் உரிமையாளர்கள், இதற்காக கூடுதல் ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் வாகனங்கள், கொடுக்கும் காசுக்கு நல்ல மதிப்பு கொண்ட பொருட்கள் ஆகும். மேலும், இவை தான் போக்குவரத்தின் வருங்காலம் ஆகும்.

லைசன்ஸ்;
மேலும், ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, லைசன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இஞ்ஜின்;
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதி நவீன 48V லித்தியம் இயான் பேட்டரி பேக் கொண்டுள்ளது.
இதன் எலக்ட்ரிக் மோட்டார், 250 வாட் பிஎல்டிசி (250 Watt BLDC) அவுட்புட் திறன் கொண்டுள்ளது.

ரேஞ்ச்;
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 65 கிலோமீட்டர் என்ற அளவிலான ரேஞ்ச் வழங்கும்.

உச்சபட்ச வேகம்;
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், உச்சபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் இ-பைக், அறிமுகம் செய்யப்படும் போது, புளு மற்றும் மெரூன் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது.
வரும் காலங்களில், விற்பனை மற்றும் டிமான்ட் பொருத்து, வேறு புதிய நிறங்களிலும், புதிய கிராஃபிக்ஸுடனும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், டியூப்லெஸ் டயர்கள், டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், உயர்தர பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் ஜிபிஎஸ் கம்பேட்டிபிளிட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

அறிமுகம்;
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் எதையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இது வரை வெளியிடவில்லை.

விலை விவரங்கள்;
ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எந்த பகுதிகளில் எந்த விலைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்பாத்து குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு - 56,390 ரூபாய்
டெல்லி - 61,690 ரூபாய்
கர்நாடகா - 56,900 ரூபாய்
ஆந்திர பிரதேசம் - 55,090 ரூபாய்
குஜராத் - 54,890 ரூபாய்
கேரளா - 55,690 ரூபாய்
மேற்கு வங்காளம் - 55,490 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;
இந்தியாவின் முதல் லித்தியம் இயான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்கிறது ஹீரோ எலக்ட்ரிக்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்
ஹீரோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்