ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தய அளவிலும், உலக அளவிலும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் இடையே பொதுவாக நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்திய வாகன சந்தைகளில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை, தசரா மற்றும் தீபாவளி ஒட்டிய பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்கின்றனர். இச்சயமத்தில், வாடிக்கையாளர்களும் அதிக அளவில் வாகனங்ககளை வாங்கி மகிழ்கின்றனர். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், பண்டிகை காலங்களுல்கு நெருக்கத்தில் தங்களின் ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக், சிங்கிள் சிலிண்டர் உடைய 100 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 8.25 பிஹெச்பியையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கின் மைலேஜ் குறித்த எந்த தகவல்களையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிடவில்லை.

ஐ3எஸ் டெக்னாலஜி;

ஐ3எஸ் டெக்னாலஜி;

ஐ3எஸ் எனப்படும் ஐடில்-ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் (i3S (idle-stop-start) technology), முதன் முதலாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஐ3எஸ் தொழில்நுட்பம், 2014-ல் ஸ்பிளென்டர் பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஐ3எஸ் தொழில்நுட்பம், மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது. இன்னும், பல்வேறு பைக்குகள் இந்த தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கின் ரியர் சைட் பேனலில், ஒரு ஐ3எஸ் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சம்;

சிறப்பு அம்சம்;

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக்கில், ஒரு புளூ பட்டன் உள்ளது. இஞ்ஜின் கில் ஸ்விட்ச்-சுக்கு பதிலாக, ரைடர்கள் இந்த புளூ பட்டன் மூலம் ஸ்டார்ட் / ஸ்டாப் பணிகளை மேற்கொள்ளலாம்.

விலை;

விலை;

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ் பைக், 51,653 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் தானே) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், மும்பையில் விற்பனைக்கு அறிமுகம்

2017-ல் ஹீரோ மோட்டோகார்ப், 10 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டம்

பட்ஜெட் விலையில் டாப்-5 பைக்குகள் - முழு விவரம்

Pictures Credit ; www.overdrive.in

English summary
Hero MotoCorp has finally launched their Passion Pro i3S motorcycle in Indian market. No major design changes are carried out on Hero Passion Pro i3S motorcycle. This Hero Passion Pro i3S bike will adorn an i3S badge on rear side panel. Passion Pro i3S is priced attractively at Rs. 51,653 ex-showroom (Thane). To know more about Hero Passion Pro i3S, check here...
Story first published: Saturday, September 24, 2016, 17:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark