இந்தியாவிற்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவிற்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்ததை விட விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்திய வாகன சந்தையானது, மிகவும் வேகமாக பலரும் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் தான், பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை இங்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் பெரும்பாலான டூ வீலர் தயாரிப்புகளை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தினர். இவற்றில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. முன்பு எதிர்பார்த்ததை விட, இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் முன்னதாகவே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

வாக்கு;

வாக்கு;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் புதிய குளோபல் மோட்டார்சைக்கிளை டக்கார் ரேல்லியில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளை டக்கார் ரேல்லியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். டக்கார் ரேல்லி வரும் ஜனவரி 2017-ல் நிறைவடைகிறது. அப்போது தான், இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொறுத்த வரை, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 150எஸ் மோட்டார்சைக்கிளின் பிரபாவம் கொண்டுள்ளது. எனினும், இந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள், அதன் போட்டி மாடல்களை காட்டிலும், கூடுதல் ஸ்போர்ட்டியாகவும், ஆக்கிரோஷமானதாக இருக்க வேண்டும் என்பதனை டிசைனர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

போட்டி;

போட்டி;

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிள், பல்சர் 200என்எஸ் மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விவரக்குறிப்புகள்;

விவரக்குறிப்புகள்;

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளின் விவரக்குறிப்புகள் அல்லது செயல்திறன் தொடர்புடைய எந்த தகவல்களும் இது வரை வெளியாகவில்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளுக்கு சிங்கிள் சிலிண்டர் உடைய 200 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவை தேவையான பிரேக்கிங் திறனை வழங்கும்.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வருகாலத்திற்கான பல்வேறு 250+ சிசி மாடல்களை உருவாக்கி வருகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எச்டிடி-40 விமானத்தின் சிறப்புகள்!

இன்று 86வது பிறந்தநாள் காணும் டெக்கான் குயின் ரயில் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்!

கம்பத்தில் மோதினாலும் கல்லு மாதிரி நின்ற டாடா டியாகோ கார்... !!

Most Read Articles
English summary
Hero Xtreme 200S will launch in India sooner than expected. It is promised by Hero MotoCorp that an all-new global motorcycle will be unveiled at Dakar Rally. Indian-based two-wheeler manufacturer is expected to introduce its Xtreme 200S there. Dakar Rally comes to an end during January 2017, which will mark the debut of Xtreme 200S. To know more, check here...
Story first published: Monday, October 17, 2016, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X