இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா

Written By:

ஹோண்டா நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற சாதனையை படைத்து வரும் இரு சக்கர வாகனமாக உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆக்டிவாவின் ஆதிக்கம்...

ஆக்டிவாவின் ஆதிக்கம்...

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா தயாரித்து வழங்குகிறது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான ஹோண்டா ஸ்கூட்டர், தொடர்ந்து 6-வது மாதமாக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற சாதனையை தக்க வைத்து கொண்டிருக்கிறது.

விற்பனை அளவுகள்;

விற்பனை அளவுகள்;

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவில் மொத்தம் 13,38,105 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன.

அதே, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்தப்படியாக, ஹீரோ ஸ்பிளென்டர், 12,33,725 யூனிட்கள் விற்கப்பட்டு சாதனை படைக்கபட்டுள்ளது.

இந்தியாவில், நடைபெறும் இரு சக்கர வாகன விற்பனையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டும் 15% என்ற அளவில் பதிவாகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

முதல் தலைமுறை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், 2001-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான், ஹோண்டா வழங்கும் வாகனங்களில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது.

2001-ஆம் ஆண்டில், ஹோண்டார் நிறுவனம், 55,000 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்றது. தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனம் ஒரு வருடத்திற்கு 2.46 மில்லியன் ஸ்கூட்டர்களை விற்று சாதனை படைக்கிறது.

கிடைக்கும் வேரியன்ட்கள்;

கிடைக்கும் வேரியன்ட்கள்;

தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனம், இந்த ஆக்டிவா ஸ்கூட்டரில், 3 வேரியன்ட்களை வழங்கி வருகின்றனர்.

ஹோண்டா ஆக்டிவா ஐ, ஆக்டிவா 3ஜி மற்றும் ஆக்டிவா 125 ஆகிய 3 வேரியன்ட்கலில் கிடைத்து வருகிறது.

பிற மாடல்கள்;

பிற மாடல்கள்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், டியோ மற்றும் ஏவியேட்டர் என்ற பெயரில் வேறு சில ஸ்கூட்டர்களையும் வழங்கி வருகின்றனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வீடு தேடி வரப்போகும் ஹோண்டாவின் 'டாக்டர்' ஆக்டிவா சர்வீஸ் திட்டம்

ஸ்பிளென்டரை வீழ்த்தி உலகின் நம்பர் - 1 இடத்தில் ஆக்டிவா!

ஆக்டிவா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda Activa is No.1 Selling Two-Wheeler for 6 Months Straight now. Activa scooter from Honda Motorcycle and Scooter India is their top-selling two-wheeler. During January to June 2016, Honda managed to sell 13,38,105 units of Activa scooter. Honda Activa currently contributes to fifteen percent of total sales in India. Honda's range includes Activa i, Activa 3G, and Activa 125...
Story first published: Wednesday, July 20, 2016, 16:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more