ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம்

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தங்களின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின், ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வபோது, சிறிய மாற்றங்களையும், புதிய வண்ணங்களையும் சேர்த்து ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

அவ்வகையில் ஹோண்டா நிறுவனமும், தங்களின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கை, 2 புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷன்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ணங்கள்;

புதிய வண்ணங்கள்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், மார்ஸ் ஆரஞ்ச் மற்றும் ஸ்டிரைக்கிங் கிரீன் ஆகிய 2 புதிய ஈர்க்கும் வகையிலான நிறங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிஷன்களாக கிடைக்கிறது.

இவை மக்களை நிச்சயம் ஈர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்பெஷல் எடிஷன்கள்;

ஸ்பெஷல் எடிஷன்கள்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், முன்பு குறிப்பிட்ட 2 வண்ணங்களில் ஆன 2 ஸ்பெஷல் எடிஷன்களில் கிடைக்கிறது.

மேலும், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கிற்கு ஸ்பெஷல் எடிஷன் டீகேல்கள் மற்றும் ஃப்யூவல் டேங்க் மற்றும் சைட் பேனல்களில் காணப்படும் ஸ்டிக்கர்களுடன் கிடைக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கில் மெக்கானிக்கல் ரீதியான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கிற்கு, சிங்கிள் சிலிண்டர் உடைய 162.71 சிசி, ஏர்-கூல்ட், பிஎஸ்-4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமான இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 15.6 பிஹெச்பியையும், 14.76 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

இந்திய சந்தைகளில் வழங்கப்படும் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

போட்டி;

போட்டி;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், யமஹா எஃப்இசட்-எஸ், சுஸுகி ஜிக்சர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

விலை;

விலை;

வழக்கமான ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கின் பேஸ் வேரியன்ட், 81,413 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

சிபிஎஸ் உடைய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், 85,912 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோண்டா பைக்களுக்கு தேர்வு முறையிலான புதிய டீகேல்கள் அறிமுகம்

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் பைக் அறிமுகம் - முழு விபரம்!

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் Vs சுஸுகி ஜிக்ஸெர்: எது பெஸ்ட்?

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கை பிரபலப்படுத்த புது ரூட்டில் இளசுகளை வளைத்த ரகசியம்!

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்மார்ட்போன் 'ஆப்'பிற்கு பெரும் வரவேற்பு!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

English summary
Honda Motorcycle and Scooter India has introduced two new special edition models of CB Hornet 160R. Honda CB Hornet 160R Bike is available in Mars Orange and Striking Green Colours. This Bike also gets special edition decals and stickers across tank and side panel. It is fitted with same 162.71cc single-cylinder, air-cooled, BS-IV engine. To know more, check here...
Story first published: Wednesday, August 17, 2016, 11:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark