2016-ல் இந்திய சந்தைகளுக்கான ஹோண்டாவின் திட்டங்கள் கசிந்தது - முழு விவரம்

Written By:

ஹோண்டா நிறுவனம், 2016-ஆம் ஆண்டில் இந்திய வாகன சந்தைகளுக்காக சில வித்தியாசமான திட்டங்களை கொண்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய அறிமுகம்;

சமீபத்திய அறிமுகம்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், சமீபத்தில் தான் உற்பத்தி நிலை ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்தனர்.

அப்போது முதல், இந்த ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற ஆவல் அதிகரிக்க துவங்கிவிட்டது.

இதன் இந்திய அறிமுகம் குறித்து, இதன் உயர் அதிகாரி பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியாவின் உயர் அதிகாரியான யாத்வீந்தர் குலேரியா சில முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளார்.

"இந்த ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் ஸ்போர்ட்ஸ் பைக், தற்போதைய நிலையில் இந்தோனேஷிய வாகன சந்தைகளில் மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இது விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கான திட்டங்களும் இல்லை" எனவும் யாத்வீந்தர் குலேரியா தெளிவுபடுத்தினார்.

முக்கியமான குறிக்கோள்;

முக்கியமான குறிக்கோள்;

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே, தற்போது இந்திய வாகன சந்தைகளில் இருக்கும் வாகனங்களை மேம்படுத்தி வழங்குவதாக தான் உள்ளது.

எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகள்;

எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகள்;

தற்போது இந்திய வாகன சந்தைகளில் விற்கப்படும் ஹோண்டா இரு சக்கர வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு நெறிமுறைகள் தொடர்பான மேம்பாடுகள் பெரும்.

இந்தியாவில் கிடைக்கும் அனைத்து ஹோண்டா இரு சக்கர வாகனங்களும் ஏஹெச்ஓ எனப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் வசதியை பெற உள்ளன.

மேலும், ஹோண்டா இஞ்ஜினியர்கள், இந்தியாவில் தங்களின் அனைத்து இரு சக்கர வாகனங்களையும் யூரோ4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டவாறு மாற்றிவிட உள்ளனர்.

சிபிஆர் 250ஆர்...

சிபிஆர் 250ஆர்...

சர்வதேச அளவில், ஹோண்டா சிபிஆர் 250ஆர், புதிய இஞ்ஜின் மற்றும் பாடி ஒர்க் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்டது.

சிபிஆர் 300ஆர், பல்வேறு வாகன சந்தைகளில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கிற்கு மாற்றாக அமைய உள்ளது. இதுவும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட மாட்டாது.

மேலும், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின், நிறம் மற்றும் டீகேல் ஆகிய அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்தியா வராத பிற மாடல்கள்;

இந்தியா வராத பிற மாடல்கள்;

இதோடு மட்டுமல்லாமல், ஹோண்டா நிறுவனம், சிபிஆர் 500ஆர், சிபி 500எஃப் மற்றும் சிபி 500எக்ஸ் ஆகிய மாடல்கள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படமாட்டாது.

மேலும், மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டரும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்தியாவில் உள்ள ஹோண்டா ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டு சற்று சோகமான ஆண்டாக இருக்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கின் படங்கள், விலை விவரம் வெளியீடு

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda recently unveiled their production version of CBR250RR sports bike. Every enthusiast were expecting that Honda would launch this sportbike in India. Yadvinder Guleria, Senior VP, Honda Motorcycle and Scooter India, cleared out several details. Honda India has no plans of launching their CBR 500R, CB 500F, CB 500X models, Metropolitan scooter etc in India. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more