ஹோண்டா லிவோ பைக், 2 புதிய வண்ணங்களில் அறிமுகம் - முழு விவரம்

Written By:

ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் ஹோண்டா லிவோ பைக், இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஹோண்டா லிவோ பைக் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

முதலாம் ஆண்டு நிறைவு;

முதலாம் ஆண்டு நிறைவு;

ஹோண்டா லிவோ பைக், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக, ஹோண்டா நிறுவனம் தங்களின் லிவோ பைக்கை இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய 2 புதிய நிறங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

ஹோண்டா நிறுவனத்தின் 110 சிசி பைக்கான ஹோண்டா லிவோ, இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அமோக வரவேற்பு பெற்று, இது வரை 2.5 லட்சம் பைக்குகள் விற்பனையாகியுள்ளது.

தற்போது, 2 புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படதனால், இதன் ஸ்போர்ட்டியான தன்மை மேலும் கூடியுள்ளது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

ஹோண்டா லிவோ பைக், அறிமுகம் செய்யபட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து, ஹோண்டா நிறுவனத்தின் உயர் அதிகாரி யாத்வீந்தர் சிங் குலேரியா மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், "100-110 சிசி பைக் செக்மேன்ட் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 12 மாதத்தில் லிவோ பைக் நல்ல முறையில் விற்பனையாகியுள்ளது. கடந்த 1 வருடத்தில், 2.5 லட்சம் ஹோண்டா லிவோ பைக்குகள் விற்பனையானது. தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த 2 புதிய நிறங்களும், ஹோண்டா லிவோ பைக்கின் ஸ்போர்ட்டி தன்மையை அதிகரித்து, இளம் தலைமுறையினரிடையே இதன் ஈர்ப்பை கூட்டும்" என ஒய். எஸ். குலேரியா தெரிவித்தார்.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

இனி, ஹோண்டா லிவோ பைக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், அத்லெட்டிக் புளு மெட்டாலிக், சன்செட் பிரவுன் மெட்டாலிக், பியர்ல் அமேசிங் வைட் மற்றும் பிளாக் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

வேரியன்ட்;

வேரியன்ட்;

ஹோண்டா லிவோ பைக், செல்ஃப் டிரம் அல்லாய் மற்றும் செல்ஃப் டிஸ்க் அல்லாய் என 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

டிசைன்;

டிசைன்;

பட்ஜெட் பைக் மாடலான ஹோண்டா லிவோ, 110 செக்மென்ட்டில் மிக நேர்த்தியான டிசைன் கொண்ட ஒரு சில மாடல்களில் ஒன்றாக உள்ளது. இதன் ஹெட்லைட் அதிக சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல் டேங்க் மிக மென்மையாக தோற்றம் உடையதாகும். அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஹோண்டா சின்னம் நம்மை பளிச்சென கவர்கிறது. டெயில்லைட், இன்டிகேட்டர் விளக்குகள் ஹோண்டா பைக் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் உள்ளன.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஹோண்டா லிவோ பைக், சிங்கிள் சிலிண்டர் உடைய 110சிசி, ஏர்கூல்டு இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 9 ஹெச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா லிவோ பைக்கின் இஞ்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பெட்ரோல் டேங்க்;

பெட்ரோல் டேங்க்;

ஹோண்டா லிவோ பைக், 8.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா லிவோ பைக், லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

ஹோண்டா லிவோ பைக், 111 கிலோ எடை மட்டுமே உடையதாக உள்ளது.

வடிவம்;

வடிவம்;

ஹோண்டா லிவோ பைக், 1,285 மில்லிமீட்டர் வீல் பேஸும், 1,099 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

சக்கரங்கள்;

சக்கரங்கள்;

ஹோண்டா லிவோ பைக்கில் 80/100 18-இஞ்ச் அளவுடைய ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இது, பஞ்சர் பிரச்னை தலைவலியே இல்லாதது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ஹோண்டா லிவோ பைக்கின், முன் புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரேக் சிஸ்டம்;

பிரேக் சிஸ்டம்;

ஹோண்டா லிவோ பைக்கின், டிரம் பிரேக் மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

டிஸ்க் பிரேக் மாடலில் முன்புறத்தில் 240 மில்லிமீட்டர் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளது. பின்புறத்தில் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது.

மீட்டர் கன்சோல்;

மீட்டர் கன்சோல்;

வேகம் மற்றும் எரிபொருள் அளவை காட்டும் விதத்தில் இரண்டு டயல்களை கொண்ட மீட்டர் கன்சோல் பொருத்தபட்டுள்ளது.

வாகனம் இயக்கும் போது எளிதாக கவனிக்கும் விதத்தில் எழத்து மற்றும் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு டயல்களுக்கும் நடுவில் எச்சரிக்கை விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பட்ஜெட் பத்மநாபன்... புதிய ஹோண்டா லிவோ: சிறப்பு பார்வை

2016-ல் இந்திய சந்தைகளுக்கான ஹோண்டாவின் திட்டங்கள் கசிந்தது - முழு விவரம்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda introduced two Exciting New Colours - Imperial Red Metallic and Matte Axis Gray Metallic, for their Livo (110cc) Bike to celebrate first anniversary of its 110cc motorcycle. New colours enhance sporty factor of the Livo. This 110cc motorycle from Honda, received excellent response from customers with 2.5 lakh units sold since its launch, an year ago. To know more, check here...
Story first published: Friday, August 5, 2016, 7:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark