ஹோண்டா இசட்50 மங்கி பைக்கின் அடிப்படையில் புதிய எம்எஸ்எக்ஸ் 125 விரைவில் அறிமுகம்

Written By:

ஹோண்டா நிறுவனம், இசட்50 மங்கி பைக்கின் அடிப்படையில் புதிய பைக்கை வடிவமைத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புகழ்பெற்ற நிறுவனங்களின் சில மாடல்கள் மக்களிடையே வரவேற்ப்பை பெற்று, பின் விற்பனை குறைவதினால் விலக்கி கொள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு. பின்னர், அவ்வாறு விலக்கி கொள்ளப்பட்ட மாடல்களை மறுஅறிமுகம் செய்வதோ அல்லது அந்த மாடல்களின் அடிப்படையில் புதிய மாடல்களை உருவாக்குவதோ வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், மறுவடிவம் பெற உள்ள ஹோண்டா இசட்50 மங்கி பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இசட்50 மங்கி பைக்...

இசட்50 மங்கி பைக்...

ஹோண்டாவின் இசட்50 மங்கி பைக், 1960-களில் அறிமுகம் செய்யப்பட்ட போது, மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாக இருந்தது. தற்போது, ஹோண்டா நிறுவனம், இந்த இசட்50 மங்கி பைக்கின் கிளாஸிக் ஸ்டைல் அம்சங்களை தற்போதைய எம்எஸ்எக்ஸ் 125 மாடலில் ஒன்று கலக்க முயற்சி செய்கின்றனர். பழைய மாடல் பெற்ற புகழினால், அதன் அம்சங்களை புதிய மாடலில் புகுத்தி அதனால் கிடைக்கும் ஆதாயத்தை அடைய முயற்சிக்கின்றனர்.

உற்பத்தி;

உற்பத்தி;

பழைய டிசைன் அடிப்படையில், உருவாக்கப்படும் புதிய எம்எஸ்எக்ஸ் 125 மாடலின் உற்பத்தி பற்றி ஹோண்டா நிறுவனம், உறுதி செய்யவில்லை. ஆனால், பழைய இசட்50 மங்கி பைக்கின் ஃபிரேமின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய டிசைனுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

ஒற்றுமைகள்;

ஒற்றுமைகள்;

இசட்50 மங்கி பைக் மற்றும் புதிய எம்எஸ்எக்ஸ் 125 மாடலின் இஞ்ஜின் மற்றும் ஃபிரேம் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் உள்ளது. ஆனால், எம்எஸ்எக்ஸ் மோனோஷாக்-கிற்கு பதிலாக 2 ஷாக்-குகளையும் இணைக்கும் வகையில் மருவடிவமைக்கப்பட்ட சப்ஃபிரேம் மற்றும் மவுன்ட்கள் உள்ளன.

எம்எஸ்எக்ஸ்;

எம்எஸ்எக்ஸ்;

எம்எஸ்எக்ஸ் மாடல் சந்தைகளில் க்ரோம் (Grom) என்றும் அழைக்கப்படுகிறது. எம்எஸ்எக்ஸ் பைக், விலை குறைவான, எடை குறைந்த மற்றும் இயக்கி மகிழும் வகையிலான பைக் ஆகும்.

நல்ல வரவேற்பு;

நல்ல வரவேற்பு;

எம்எஸ்எக்ஸ் பைக் மாடல் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 2015-ல், இங்கிலாந்தில் மட்டும் சுமார் 1,000 எம்எஸ்எக்ஸ் பைக் விற்பனையானது. மேலும், இந்த எம்எஸ்எக்ஸ் பைக், பிற ஐரோப்பிய சந்தைகளிலும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது.

குறிக்கோள்;

குறிக்கோள்;

ஹோண்டா நிறுவனம், இந்த புதிய எம்எஸ்எக்ஸ் 125 மாடலின் வடிவில், நவீன தோற்றம் உடைய கிளாஸிக் பைக்கை உருவாக்க முயற்சிக்கின்றனர். மேலும், இதை மாசு-உமிழ்வு தொடர்பான நெறிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ள ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வாகன சந்தைகளிலும் விற்க முடியும்.

English summary
Honda is bringing back its legendary Z50 Monkey's classic style to MSX125. Z50 Monkey Bike was very popular when it was launched in 1960s. Honda is trying to capitalise its popularity by mixing with current MSX125. MSX is known as Grom - cheap, fun, light small motorcycle. Honda has not confirmed about production yet, but have patented new design based on old Z50 frame. To know more, check here...
Story first published: Friday, September 23, 2016, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark