ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஆண்ட்ராய்ட் ஆப் மூலம் 500+ புக்கிங்கள் குவிப்பு

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் புதிய இரு சக்கர வாகனமான ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தனர்.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 500க்கும் அதிமான புக்கிங்குகளை பெற்றுள்ளது பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டா நவி பற்றி...

ஹோண்டா நவி பற்றி...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சார்பாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நவி என்ற புதிய இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஹோண்டா நவி பைக் மற்றும் ஸ்கூட்டரின் கிராஸ்ஓவர் (கலப்பின வாகனமான) ரகத்தை சேர்ந்த இரு சக்கர வாகனம் ஆகும்.

மோட்டோ ஸ்கூட்டர்?

மோட்டோ ஸ்கூட்டர்?

பைக் மற்றும் ஸ்கூட்டரின் கிராஸ்ஓவர் நவி, மோட்டோ ஸ்கூட்டர் ரக வாகனத்தில் வகைபடுத்தபடுகிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்ட வாகனங்களில், மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வாகங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 109.2 சிசி, 4 - ஸ்ட்ரோக் இஞ்ஜின் கொண்டுள்ளது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் இஞ்ஜின், 7,500 ஆர்பிஎம்களில் 7.83 பிஹெச்பியையும், 5,500 ஆர்பிஎம்களில் 8.96 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

ஹோண்டா நிறுவனம், புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டருக்கு, காம்பி-பிரேக் சிஸ்டம் வகையிலான பிரேக்கை பொருத்தியுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின், முன் சக்கரத்திற்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் சக்கத்திற்கு மோனோ ஷாக் போர்க்கும் பொருத்தபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

நவி மோட்டோ ஸ்கூட்டருக்கான டிசைன் அம்சங்களை, அந்நிறுவனத்தின் ஆஃப்ரோட் பைக்களில் இருந்து ஏற்று கொண்டிருக்கிறது.

ஏற்று கொண்ட அம்சங்களை வைத்து, சிறிய மாடல் கொண்ட வாகனத்தை வழங்கியுள்ளது.

உருவாக்கம்?

உருவாக்கம்?

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் தான், இந்தியாவில் உள்ள ஹோண்டா நிறுனத்தின் ஆர் அண்ட் டி (ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்-ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம்) குழு மூலம் டிசைன் செய்து, உருவாக்கபட்ட முதல் தயாரிப்பு ஆகும்.

புக்கிங்;

புக்கிங்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் புக்கிங்களை, நவி ஸ்மார்ட்ஃபோன் ஆண்ட்ராய்ட் ஆப் மூலமும் ஏற்கும் வசதியை வழங்கியுள்ளது.

இவ்வாறாக, ஹோண்டா நவி அறிமுகம் செய்யபட்ட 2 வாரங்களில், ஆன்லைன் முறையில் மட்டும், சுமார் 500 புக்கிங்கள் குவிந்துள்ளது.

வண்ணங்கள்;

வண்ணங்கள்;

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், பேட்ரியார் ரெட், ஹாப்பர் ரெட், ஷாஸ்டா வைட், ஸ்பார்க்கி ஆரஞ்ச் மற்றும் பிளாக் ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.

டெலிவரி;

டெலிவரி;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெலிவரி, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

விலை;

விலை;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 39,500 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெண்டும் கெட்டான் டிசைனில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் புதிய நவி!

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கை பிரபலப்படுத்த புது ரூட்டில் இளசுகளை வளைத்த ரகசியம்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda Motorcycle India recently launched their new two-wheeler, the Navi at the Auto Expo 2016. Honda Navi two-wheeler is a crossover between Bike and Scooter and it categorized under the Moto Scooter type of 2 Wheelers. The Navi has gathered 500 online bookings in India through its Navi Smartphone App, within two weeks of its Launch.
Story first published: Thursday, February 25, 2016, 16:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark