ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர்கள், ஷோரூம்களுக்கு அனுப்பபடுகிறது

By Ravichandran

ஹோண்டா நிறுவனத்தால் தயாரித்து முடிக்கபட்ட நவி மோட்டோ ஸ்கூட்டர்கள், உற்பத்தி ஆலைகளில் இருந்து இந்தியவில் உள்ள ஷோரூம்களுக்கு அனுப்பும்
நடவடிக்கை தொடங்கிவிட்டது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த மாதம் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தான் அறிமுகம் செய்யபட்டது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், தங்களின் ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர்களை ராஜஸ்தானில் உள்ள டபுகரா உற்பத்தி ஆலையில் தான் உற்பத்தி செய்து வருகிறது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெலிவரிகள், வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் துவங்கும் என தகவல்கள் வெளியாகிறது.

honda-navi-moto-scooter-dispatched-tapukara-plant-to-showrooms-01

தற்போது வரை, ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் அமோகமான வரவேற்ப்பை பெற்று வருகிறது. இது வரை, நவி மோட்டோ ஸ்கூட்டருக்கு 1000+ புக்கிங் குவிந்து உள்ளது. ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் 39,500 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஹோண்டா நவி ஆப் மூலமாகவும் புக்கிங் ஏற்கபட்டு வந்தது. இது வரை ஹோண்டா நவி ஆப், 20,000 டவுன்லோட்களை கடந்துள்ளது.

ஹோண்டா நவி, துவக்கத்தில் இருந்து இறுதி வடிவம் வரை, ஹோண்டா இந்தியாவில் உள்ள ஆர் அண்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழு மூலம் உருவாக்கபட்டது. ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர், ஹோண்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற 2 சக்கர வாகனமான ஆக்டிவா ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டது.

ஆங்கில வார்த்தைகளான 'New Additional Value for India' (நியூ அடிஷினல் வேல்யூ ஃபார் இந்தியா) என்ற சொற்றொடரின் சுருக்கமான Navi (நவி) என்ற சொல் கொண்டு தான் இதன் பெயர் சூட்டபட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 109.19 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. நவியின் இஞ்ஜின் 7.83 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.96 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், ஆட்டோமேட்டிக் வி-மேட்டிக் சிஸ்டத்துடன் இணைக்கபட்டுள்ளது.

honda-navi-moto-scooter-dispatched-tapukara-plant-to-showrooms-02

ஹெச்ஈடி (ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி) தொழில்நுட்பம் கொண்டுள்ளதால், ஹோண்டா நவி, சிறந்த மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது. ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஒரு மணி நேரத்திற்கு 81 கிலோமீட்டர் என்ற அளவிலான உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், பேட்ரியார் ரெட், ஹாப்பர் ரெட், ஷாஸ்டா வைட், ஸ்பார்க்கி ஆரஞ்ச் மற்றும் பிளாக் ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வகையில், ஹோண்டா நிறுவனம் ஏராளமான தனிப்பட்ட தேர்வுகளை வழங்குகிறது.

Most Read Articles
English summary
Honda Navi is being dispatched from Tapukara Production Facility to Showrooms. Honda Motorcycle and Scooter India launched their Navi model at 2016 Auto Expo. Deliveries of Navi are to begin across India during April. Honda registered over 1,000 bookings since its launch. Navi Moto Scooter is priced at Rs. 39,500 ex-showroom (Delhi). To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X