ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் முழு விவரங்கள்

Written By:

ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தற்போது எந்தெந்த மாடல்கள் இந்தியாவில் முதலில் உற்பத்தி செய்யப்பட உள்ளது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிளை இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விற்பனையை கூட்ட முயற்சி;

விற்பனையை கூட்ட முயற்சி;

ஹஸ்க்வர்னா நிறுவனம், உலக சந்தைகளில் தங்களின் மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை கூட்ட முயற்சித்து வருகிறது.

இந்தியாவில் தயாரிக்க திட்டம்;

இந்தியாவில் தயாரிக்க திட்டம்;

ஸ்வீடன் நாட்டை மையாக கொண்டு இயங்கும், ஹஸ்க்வர்னா நிறுவனம், தங்களின் மோட்டார்சைக்கிள் ரேஞ்ச்களில் சிலவற்றை இந்தியாவில் தயாரிக்க திட்டம் கொண்டுள்ளனர்.

கேடிஎம் பங்களிப்பு;

கேடிஎம் பங்களிப்பு;

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் கேடிஎம் நிறுவனத்திற்கு அதிக அளவிலான பங்குகள் உள்ளது. கேடிஎம் தான் ஹஸ்க்வர்னா நிறுவனத்திற்கான அடுத்த ஹிட் மாடல்களின் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கேடிஎம் நிறுவனமானது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூனே அருகில் உள்ள சகன் என்ற இடத்தில் அமைக்கபட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை உபயோகித்து கொண்டு தங்களின் இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றது.

தற்போதைய தயாரிப்புகள்;

தற்போதைய தயாரிப்புகள்;

தற்போதைய நிலையில், ஆஸ்திரியா மையாக கொண்டு இயங்கி, இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான கேடிஎம், இந்தியாவில் 6 மாடல்களை தயாரித்து, பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்த 6 மாடல்களில், 4 மாடல்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. பாக்கி 2 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை. மாறாக, சர்வதேச சந்தைகளில் மட்டுமே விற்கபடுகிறது.

காட்சிபடுத்தல்;

காட்சிபடுத்தல்;

சமீபத்தில் தான், ஹஸ்க்வர்னா தங்கள் நிறுவனத்தின் விட்பிலின் 401 மற்றும் ஸ்வார்ட்பிலின் ஆகிய 2 மாடல்களை, கான்செப்ட் நிலை வாகனங்களாக காட்சிபடுத்தியது.

இந்தியாவில் தயாரிப்பு;

இந்தியாவில் தயாரிப்பு;

சமீபத்தில், கான்செப்ட் நிலை வாகனங்களாக காட்சிபடுத்தபட்ட விட்பிலின் 401 மற்றும் ஸ்வார்ட்பிலின் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்களையும், இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த இரு மாடல்களும், இந்தியா வாகன சந்தைகளில் விற்பனை செய்யபட உள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

ஹஸ்க்வர்னா நிறுவனம் சார்பாக இந்தியாவில் தயாரிக்கபட உள்ள விட்பிலின் 401 மற்றும் ஸ்வார்ட்பிலின் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்களும் 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய வாகன சந்தைகள் மற்றும் சர்வதேச வாகன சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

விட்பிலின் 401 மற்றும் ஸ்வார்ட்பிலின் ஆகிய இரு மாடல்களுக்குமே பொதுவான பொருத்தபட உள்ளது. 390 ட்யூக் மற்றும் அர்சி390 மாடல்களில் உபயோகிக்கபடும் அதே 373 சிசி, சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் இந்த விட்பிலின் 401 மற்றும் ஸ்வார்ட்பிலின் மோட்டார்சைக்கிள்களுக்கும் பொருத்தபட உள்ளது.

சர்வதேச சந்தைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த புதிய மாடல்களான விட்பிலின் 401 மற்றும் ஸ்வார்ட்பிலின் ஆகியவற்றின் தன்மைகள் மேம்படுத்தி மாற்றியமைக்கபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹக்ஸ்வர்னாவை இந்தியாவில் களமிறக்கும் கேடிஎம்!!

ஹஸ்க்வர்னாவை கையகப்படுத்திய பஜாஜின் கேடிஎம் பிராண்டு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Husqvarna Motorcycles are to be made and exported from India. Husqvarna is very much determined on increasing its sales and production in the global market. Swedish-based two-wheeler manufacturer plans to manufacture few of its models from India. Vitpilen 401 and Svartpilen are to made in India and sold in Indian and global markets from 2017.
Story first published: Sunday, February 28, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark