அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஹஸ்க்வர்னா பிரிமியம் பைக்குகள்!

Written By:

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறவனம் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் நல்ல வர்த்தகத்தை பதிவு செய்திருக்கும் கேடிஎம் நிறுவனம், அடுத்து ஹஸ்க்வர்னா பிரிமியம் மோட்டார்சைக்கிள்களையும் இந்தியாவில் களமிறக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஹஸ்க்வர்னா பிரிமியம் பைக்குகள்!

முதல்கட்டமாக ஹஸ்க்வர்னா விட்பிலேன் 401 மற்றும் ஸ்வர்ட்பிலேன் 401 ஆகிய இரண்டு பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹஸ்க்வர்னா நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த இரு பைக் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஹஸ்க்வர்னா பிரிமியம் பைக்குகள்!

இந்த பைக் மாடல்களிலுமே கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இடம்பெற்று இருக்கிறது. இந்த பைக்குகளில் 373சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43.3 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஹஸ்க்வர்னா பிரிமியம் பைக்குகள்!

கேடிஎம் பைக்குகளில் உள்ள அதே ட்ரெல்லிஸ் ஃப்ரேம் என்ற அடிச்சட்டத்தை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனும் ஒன்றுதான். முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ஒற்றை பிஸ்டனுடன் பைபர் காலிபர் கொண்ட 230மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஹஸ்க்வர்னா பிரிமியம் பைக்குகள்!

பஜாஜ் நிறுவனத்தின் புரோபைக்கிங் என்ற பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படும். தற்போது பஜாஜ் ஆட்டோவின் புரோபைக்கிங் ஷோரூம்களில் கவாஸாகி மற்றும் கேடிஎம் நிறுவனங்களின் உயர்வகை பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஹஸ்க்வர்னா பிரிமியம் பைக்குகள்!

இந்த இரண்டு பைக் மாடல்களுமே மிக தனித்துவமான டிசைன் கொண்டவை என்பதால் கேடிஎம் பைக்குகளை போன்றே சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Husqvarna is set to enter India in 2017 and will be sold in India with the help of Bajaj.
Story first published: Friday, December 23, 2016, 10:35 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos