ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701...

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701...

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிள், ஸ்வீடன் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ஹஸ்க்வர்னா நிறுவனம் தயாரிக்கும் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இது முன்னதாக கான்செப்ட் வடிவில், இத்தாலியின் மிலன் நகரில் நடைப்பெற்ற 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701, நேக்கட் ரோட் பைக் தோற்றம் கொண்டதாக உள்ளது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளின் சோதனைகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிள், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் தான் அடிப்படை;

கேடிஎம் தான் அடிப்படை;

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிள், கேடிஎம் 690 டியூக் மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளுக்கு, கேடிஎம் 690 டியூக்கின் அதே ஃபிரேம், இஞ்ஜின், சஸ்பென்ஷன், வீல்கள் மற்றும் பிரேக்குகள் உபயோக்கிக்கப்படுகிறது.

கேடிஎம் 690 டியூக்கின் 690சிசி இஞ்ஜினில் இருந்து வெளியாகும் 73 பிஹெச்பி திறன் கூட மாறுபடாது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிள், கேடிஎம் 690 டியூக் மோட்டார்சைக்கிளோடு ஒப்பிடுகையில் ஸ்டைலிங்கில் வேறுபடுகிறது.

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிள், மெல்லிய தோற்றம் அளிக்கும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.

கேடிஎம்-மை ஒப்பிடுகையில், ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளின் சீட் மற்றும் டெயில் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

தாழ்த்தப்பட்ட சீட்கள்;

தாழ்த்தப்பட்ட சீட்கள்;

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளின் ஹேண்டில் பார்கள் தாழ்த்தப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஸ்பை படத்தில் காணப்படுவது போல், கஃபே ரேசரில் அமர்ந்து இயக்கும் நிலையில், இந்த ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 மோட்டார்சைக்கிளை இயக்கலாம்.

வருங்கால வடிவம்;

வருங்கால வடிவம்;

நாப்பி டயர்கள் (knobby tyres) உடைய, ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் கொண்டு, ஸ்வார்ட்பிலின் 701 என்ற பெயரில், வருங்காலத்தில் மோட்டார்சைக்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் முழு விவரங்கள்

ஹக்ஸ்வர்னாவை இந்தியாவில் களமிறக்கும் கேடிஎம்!!

ஹஸ்க்வர்னா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 - கூடுதல் படங்கள்

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 - கூடுதல் படங்கள்

ஹஸ்க்வர்னா விட்பிலின் 701 - கூடுதல் படங்கள்

Spy Picture Credit - Visordown

English summary
Production Ready Husqvarna Vitpilen 701 Motorcycle Spy Pics were released recently. Swedish motorcycle manufacturer Husqvarna unveiled their Vitpilen 701 naked road bike concept at 2015 EICMA show in Milan. It is expected to make its debut later this year. Vitpilen 701 is based on KTM's 690 Duke and uses same frame, engine, suspension, wheels, and brakes. To know more, check here...
Story first published: Friday, July 29, 2016, 11:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark