இந்தியாவின் முதல் கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக்: இது ஒரு சென்னை தயாரிப்பு!

By Saravana Rajan

இந்தியாவின் முதல் கிராஸ்ஓவர் ரக எலக்ட்ரிக் பைக் மாடலை சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான வோல்ட்டா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

சைக்கிள் போன்றும், பைக் போன்றும் பயன்படுத்திக் கொள்ளும் வசதி கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

வோல்ட்டா ZAP என்ற பெயரில் இந்த எலக்ட்ரிக் பைக் அழைக்கப்படுகிறது. சாதாரண சைக்கிளில் பேட்டரி மற்றும் மின் மோட்டாரை பொருத்தி இந்த எலக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கியிருக்கின்றனர்.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

இந்த சைக்கிளில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரி, உலகின் மிக நவீன தொழில்நுட்பமும், இலகு எடையும் கொண்டது. இந்த பேட்டரி வெறும் 3 கிலோ மட்டுமே எடை கொண்டது. எனவே, எளிதாக கையாள முடியும்.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த பேட்டரியை தேவையில்லாதபோது தனியாக கழற்றி வைத்துக் கொள்ளவும் முடியும்.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

இந்த எலக்ட்ரிக் பைக்கில் இருக்கும் பேட்டரியிலிருந்து லேப்டாப், மொபைல்போன் மற்றும் டேப்லெட்டுகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

சைக்கிள் போன்றும பெடல் செய்தும் செல்லலாம் என்பதுதான் இதன் ஆகச்சிறந்த விஷயம். அதேபோன்று, ஒருமுறை பெடல் சுழற்சிக்கு அதிகபட்சமான சக்கர சுழற்சியை தரும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

டிஸ்க் பிரேக்குகள், எல்இடி ஹெட்லைட் போன்றயைும், பொருட்களை வைத்துக் கொள்வதற்கான சிறிய இடவசதியும் உண்டு.

சைக்கிள் கம் மின்சார பைக்... சென்னை நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு!

இதுதவிர, கஸ்டமைஸ் வசதிகளையும் வோல்ட்டோ மோட்டார்ஸ் வழங்குகிறது. இந்த பைக்கில் பின் இருக்கை வசதி கிடையாது.

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

Most Read Articles
English summary
Read in Tamil: India’s First Crossover Electric Bike Revealed.
Story first published: Tuesday, September 13, 2016, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X