புதுப்பொலிவு பெறும் இந்தியன் மோட்டார்சைக்கிள் டூ வீலர்கள் - முழு விவரம்

By Meena

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டூ வீலர்கள் சர்வதேச அளவில் ஹிட்டடித்தவை. அல்ட்ரா மாடர்னான டிசைன்கள், அதிக செயல்திறன் மிக்க எஞ்சின்கள், திரும்பிப் பார்க்க வைக்கும் கிளாஸி லுக் என பல சிறப்பம்சங்களைக் கொண்டு இருப்பதால், இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக்குகளை வயது பேதமின்றி அனைவரும் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஏற்கெனவே பக்கா டிரெண்டியாக இருக்கும் அந்த பைக்குகளை மேலும் மெருகேற்றினால் எப்படியிருக்கும்? அதுவும், வண்ணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இரண்டையும் மேம்படுத்தினால் கூடுதல் சிறப்புதானே... கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்ற ஃபீலிங்தான் ஆட்டோ மொபைல் ஆர்வலர்களுக்கு ஏற்படும்.

புதிய மேம்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கத்தான் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் மேம்படுத்தப்பட்ட இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

அதேவேளையில், இந்தியாவில் அடுத்த ஆண்டுதான் அவை வரவுள்ளன. வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ரீதியாகவும் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ். அதேபோல் வண்ணங்கள், விலை உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

ஸ்கவுட் சிக்ஸ்ட்டி மற்றும் ஸ்கவுட் க்ரூஸர் மாடல்களில் கேஸ் வெளியேற்றும் குழாய்கள் (எக்ஸாஸ்டர் பைப்கள்) புதிதாக வடிவமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் கால் வைப்பதற்கு கூடுதல் இடவசதி கிடைக்கும். ஸ்டீயரிங் ரேடியஸ் (வாகனங்களை தி்ருப்புவதற்கான அளவு), பின்புற ஷாக் அப்சார்பர் உள்ளிட்டவையும் அந்த மாடல் பைக்குகளில் மேம்படுத்தப்பட உள்ளன.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

மூன்று கலர்களில் இந்த மாடல்கள் மார்க்கெட்டுக்கு வரவுள்ள. சிவப்பு மற்றும் கருப்பு, நீலம் மற்றும் வெண்மை, ஐவரி கிரீம் ஆகிய மூன்று நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ரோட் மாஸ்டர், சிஃப்டெய்ன் உள்ளிட்ட மாடல்களில் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது. சீஃப் விண்டேஜ், சீஃப் கிளாஸிக், இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு உள்ளிட்ட மாடல்களும் புதிய வண்ணங்களில் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரவுள்ளன.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

மொத்தத்தில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஆட்டோ மொபைல் உலகில் புதிய போட்டிக் களத்தை உருவாக்கவும் வலை விரித்துக் காத்திருக்கிறது இந்தியன் மோட்டார் சைக்கள்ஸ் நிறுவனம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் செப்டம்பரில் அறிமுகம்

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் பிராந்திய அளவில் மும்பையில் அறிமுகம்

இந்தியன் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Indian Motorcycle will be updating its entire two-wheeler cruiser range. Several international markets are expected to get new models by 2016-end. Indian market could receive updated models as early as 2017. Several cosmetic and technical updates have been included by Indian Motorcycle. Entire range will witness new features, colours, and riding aids. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X