இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் செப்டம்பரில் அறிமுகம்

Written By:

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், தாங்கள் தயாரித்து வழங்கும் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர்...

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர்...

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தயாரித்து வழங்கும் பிரிமியம் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்த அமெரிக்க இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் தாங்கள் வழங்கும் தயாரிப்புகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் நகரிலுள்ள ஸ்பிரிங்ஃபீல்டு என்ற இடத்தில் தான் முதன் முதலில் துவங்கப்பட்டது.

அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்த புதிய மாடலுக்கு இந்த பெயர் சூட்டியிருக்கிறது.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கும் இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே விற்கப்பட உள்ளது.

இதனால், இது நல்ல பிரிமியம் விலையில் தான் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், 1,811 சிசி, வி-ட்வின், ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 138.90 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்தியன் மோட்டார்சைக்கிள் இஞ்ஜினியர்கள், இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜினை 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைத்துள்ளனர்.

எடை;

எடை;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், அச்சுருத்தும் வகையில் 388 கிலோகிராம் எடை கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இதில் டயர்-பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிமோட் லாக்கிங், டியூவல் ரைடிங் லைட்கள், க்ரூஸர் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

மேலும், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்ட் அம்சமாக சேர்க்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், அறிமுகம் செய்யப்படும் போது, மொத்தம் 2 நிறங்களில் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதை பொருத்து, தண்டர் பிளாக் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் ரெட் ஆகிய வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

தற்போதைய நிலையில், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தங்களின் எந்த பிரிமியம் க்ரூஸர்களையும், இந்தியாவில் அசெம்பிள் செய்யும் எண்ணத்தில் இல்லை.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

விலை;

விலை;

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு க்ரூஸர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சுமார் 30.60 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியன் நிறுவனத்தின் புதிய ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் - விபரம்

2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் பிராந்திய அளவில் மும்பையில் அறிமுகம்

இந்தியன் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
American-based cruiser bike manufacturer Indian Motorcycle is planning to increase product portfolio in Indian market by launching their Indian Springfield Cruiser Motorcycle in India. It is expected to launch during September. Indian Motorcycle offers Springfield via CBU (Completely Built Unit) route. It may be launched with approximate price of Rs. 30.60 lakh ex-showroom...
Story first published: Thursday, July 14, 2016, 13:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark