இந்திய கடற்படை அதிகாரிகள், பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள் மூலம் பயணம்

Written By:

இந்திய கடற்படையை சேர்ந்த அதிகாரிகள் (நேவி ஆஃபிஸர்கள்), மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளை, பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள் மூலம், வலம் வரும் தி இன்வின்சிபில் ரைட் என்ற மோட்டார்சைக்கிள் பயணத்தை துவக்கினர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சமீபத்தில் தான் தங்களின் பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தனர். இது ஐஎன்எஸ் விக்ராந்த் எனப்படும் விமானம் தாங்கி போர்கப்பலின் மீதங்கள் கொண்டு உருவாக்கபட்டது. இந்த மோட்டார்சைக்கிளின் டெலிவரி தியாகிகள் தினமான மார்ச் 23, 2016 முதல் துவங்கியுள்ளது.

இதனை அனுசரிக்கும் வகையில், ஒரு வித்தியாசமான பயணத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

indian-navy-officers-bajaj-v-15-motorcycle-ride-maharashtra-01

இந்திய கடற்படையை சேர்ந்த அதிகாரிகள், பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள் மூலம் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளை வலம் வருகின்றனர். 15 இந்திய கடற்படை அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து, சத்ரபதி சிவாஜியின் கட்டளைக்கு கீழ் இருந்த 23 கோட்டைகளை சென்று வர உள்ளனர். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே, இந்திய இளைஞர்களை இந்திய கடற்படையில் சேருவதற்கு ஊக்குவிபதற்காக நடத்தபடுகிறது.

இந்த பயணம், மும்பையின் கொலாபாவில் உள்ள நேவி நகரில் இருக்கும் கோஹ்லி விளையாட்டு மைதானத்தில் இருந்து இந்த பயணம் 23-ஆம் தேதி துவங்கியது. இந்த பயணத்தை, ரியர் அட்மைரல் எஸ் என் கோர்மாடே கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உயர் அதிகாரி சுமீத் நாரங் அவர்களும் பங்கேற்றார்.

indian-navy-officers-bajaj-v-15-motorcycle-ride-maharashtra-02

பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள், 150 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்ட், டிடிஎஸ்-ஐ இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 11.84 பிஹெச்பியையும், 13 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள்,62,820 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கபடுகிறது.

பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள், தற்போதைய நிலையில் எபோனி பிளாக் மற்றும் பியர்ல் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. சுமார் 10,000 வி 15 மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மார்ச் 23-ஆம் தேதி டெலிவரி செய்து இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

சமீப காலமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இத்தகைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது.

English summary
Navy Officers Ride on Bajaj V-15 Across Maharashtra for the Invincible Ride. Bajaj Auto recently launched their V-15 motorcycle. This was made from scrap metal from the INS Vikrant battleship. Deliveries of V-15 by Bajaj commenced on Martyr's Day - March 23, 2016. Indian Naval Officers are riding across Maharashtra on Bajaj's V-15. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark