புதிய இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்தது!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த பாரம்பரியம் மிக்க இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது புதிய இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற க்ரூஸர் ரகத்திலான பண்புகளை பெற்றிருக்கிறது. பாரம்பரிய டிசைனும், நவீன தொழில்நுட்பங்களும் கலந்த அம்சங்களுடன் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்ப்டடுள்ளது.

புதிய இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கும். ஸ்டீல் கிரே/ பர்கண்டி மற்றும் புளூ/ஸ்டார் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் வந்துள்ளது.

இந்த பைக்கில் இருக்கும் 1,811சிசி வி ட்வின் தண்டர் ஸ்ட்ரோக் 111 எஞ்சின் அதிகபட்சமாக 138.9 என்எம் டார்க் திறனை வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

அதிக எடையை தாங்கும் வலிமையான சேஸி உள்ளது. மேலும், இந்த சேஸி சிறப்பான கையாளுமையை வழங்கும். இந்த மோட்டார்சைக்கிள் 241.7 கிலோ எடை கொண்டது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், நிகழ்நேர மைலேஜ் தகவலை தரும் இன்ட்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

 

 

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ரூ.31.07 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கிடைக்கும்.

English summary
All-new Springfield cruiser by Indian Motorcycles has been launched in India for Rs. 31.07 lakh ex-showroom (Delhi).
Story first published: Monday, November 21, 2016, 9:35 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos