ஓலா, உபேர் இயக்கி வந்த பைக் டேக்ஸி சேவைகள் சட்டத்திற்கு புறம்பானது - கர்நாடக அரசு

Written By:

ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் இயக்கி வந்த பைக் டேக்ஸி சேவைகள் சட்டத்திற்கு புறம்பானது எனது கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் தான், ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் பைக் டேக்ஸி சேவையை பெங்களூருவில் துவக்கின. இது சட்டதிற்கு உட்பட்டது அல்ல என்றும், மேலும் இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

டெக்கான் ஹெரால்ட் என்னும் நாளிதழில் வெளியான செய்திபடி, பைக் டேக்ஸி சேவைக்காக ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் பிரயோகித்து வந்த பைக்குகளை பிராந்திய போக்குவரத்து ஆணையம் கைபற்றி வருகிறது. வழக்கமான தனிபட்ட போக்குவரத்திற்கு வாங்கிய வாகனங்களை கொண்டு பொது போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்று இந்த ஆணையம் புகார் தெரிவிக்கிறது.

karnataka-government-declares-bike-taxis-services-illegal

பொது போக்குவரத்திற்கு உபயோகிக்க வேண்டி இருந்தால், இந்த ரைடர்கள் அதற்கு என பிரத்யேகமான லைசன்ஸ் எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்களுக்கு பைக் டேக்ஸி இயக்குபவர்கள் அதற்கான பிரத்யேகமான லைசன்ஸ் எடுக்கவில்லை என அறிவிக்கபட்டுள்ளது.

டெக்கான் ஹெரால்ட் என்னும் நாளிதழுக்கு, இது குறித்து விவரம் அளித்த உயர் அதிகாரி, எந்த ஒரு ரைடரும், பேட்ஜ் மற்றும் மஞ்சள் போர்டு இல்லாமல் வாகனம் இயக்கினால், அது வழக்கமான தனிநபர் வாகனமாகவே கருதப்படுகிறது. மேலும், அது மஞ்சள் போர்ட் கொண்ட போக்குவரத்து வாகனமாக மாற்றபடும் வரை, அதை பைக் டேக்ஸியாக இயக்க முடியாது என தெரிவித்தார்.

இது குறித்து, ஓலா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் கூறியது. ஆனால், தங்கள் நிறுவனம் மேற்கொண்ட இந்த திட்டம் வெரும் பைலட் பிராஜக்ட் தான் என்றும், இந்த நிலையில் மேற்கொள்ளபடும் சேவையில் பின்பற்ற வேண்டிய அளவிற்கு எந்த விதமான விதிமுறைகளும் கர்நாடக மாநிலத்தில் இல்லை என ஒலா நிறுவனம் தெரிவித்தது.

English summary
Karnataka Government has declared that, the recently commenced Bike taxi services from Ola and Uber in Bangalore are illegal. Government has also asked the commuters to not use these services. Ola said that, these Bike Taxi was just a pilot project and there were no regulations to follow in Karnataka for this type of service.
Story first published: Sunday, March 6, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark