கர்நாடகாவில் புதிய பைக்குகளை பதிவு செய்ய, 2 ஹெல்மெட்கள் அவசியம்

Written By:

கர்நாடகாவில் புதிய பைக்குகளை பதிவு செய்ய, 2 ஹெல்மெட்கள் அவசியம் என அறிவிக்கபட்டுள்ளது.

நீங்கள் பெங்களூருவிலோ அல்லது கர்நாடகாவின் பிற பகுதிகளில் பைக்குகளை வாங்க நினைத்தால், வண்டி வாங்கும் போது உங்களிடம் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற 2 ஹெல்மெட்கள் உள்ளது என நிரூபிக்க வேண்டும்.

தவான்கரே பிராந்திய போக்குவரத்து அலுவலகம், இந்த சட்டத்தை பைலட் முறையில் நடைமுறைபடுத்தியுள்ளது. இதை தொடர்ந்து போக்குவரத்து நிர்வாகமும், இந்த சட்டத்தை பிற பகுதிகளில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பிள்ளியன் ரைடர் எனப்படும் பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து செல்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்தில் கட்டாயமாக ஆக்கியது.

karnataka-new-bike-registration-process-2-helmets-compulsory

இது தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆணையாளர் (கமிஷ்னர்) ராமே கௌடா இடி ஆட்டோ நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, ரைடர் (வாகனத்தை இயக்குபவர்) மற்றும் பிள்ளியன் ரைடர் எனப்படும் இருவரும், ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என்ற சட்டம் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், வாகன டீலர்களை ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றாலும், அவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தான், இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யும் போது, வாடிக்கையாளர்களே தங்களிடம் 2 ஹெல்மெட்கள் உள்ளதாக நிரூபிக்க வேண்டும்" என கூறினார்.

இந்த சட்டம் எப்போது அனைத்து பகுதிகளுக்கும் நடைமுறைக்கு வரும் என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும், சோதனை முறையிலாவது தவான்கரே பகுதியில் இந்த சட்டம் நடைமுறை படுத்தபட்டதை அடுத்து, இது பிற பகுதிகளிலும் விரைவில் அமலாக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
According to the recent notifications, if any New 2 Wheelers owners should register their New vehicles, they should prove that, they own 2 ISI certified Helmets with them, at the time of purchase. The reason for this rule is, Supreme Court order made helmets mandatory for pillion riders also in January. To know more about this new notification, check here...
Story first published: Tuesday, March 22, 2016, 13:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark