ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக கவாஸாகியின் புதிய படைப்பு

By Ravichandran

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக, கவாஸாகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் எஸ்ட்ரெல்லா என்ற புதிய மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

கவாஸாகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்துள்ளது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம், இந்த எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளை ஆர் அண்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது.

கவாஸாகி நிறுவனத்தின் எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட உள்ளது.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிள், 249 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும். கவாஸாகி எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளின் 17.16 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 18 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிள், குறிப்பாக ராயல் என்பீல்டு 350 ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போடும்.

kawasaki-estrella-motorcycle-india-launching-soon

திறன்மிக்க பிரேக் வசதிகளுக்காக, எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளின் முன் சக்கரங்கள் மற்றும் பின் சக்கரங்கள் ஆகிய இரண்டிற்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது. எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் போர்க்குகளும், பின் பக்கத்தில் பாரம்பரியமான ட்வின் காயில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்கள் கொண்டுள்ளது.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த டிசைன், மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான ரெட்ரோ / கிளாசிக் தோற்றம் கொண்டுள்ளது.

சந்தையில் மிக ஆக்கிரோஷமாக போட்டி போட, எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளை கவாஸாகி நிறுவனம் இந்தியாவிலேயே அசம்பிள் செய்ய உள்ளது. பூனே அருகே சகன் என்ற இடத்தில் உள்ள பஜாஜ் உற்பத்தி ஆலையை பயன்படுத்தி, கவாஸாகி நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை இந்தியாவிலேயே அசம்பிள் செய்யும்.

kawasaki-estrella-motorcycle-india-launching-very-soon

சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் முறையில், ஒரு வாகனங்களுக்கான பாகங்கள் இறக்குமதி செய்யபட்ட பின்னர், அது உள்நாட்டில் அசம்பிள் செய்யபடுகிறது. இந்த முறையில் தங்களின் எஸ்ட்ரெல்லா மோட்டார்சைக்கிளை தயாரித்தால் தான், இந்தியாவில் தயாரிக்கபடும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட முடியும்.

கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் 250-350 சிசி சந்தையை ஆராய்ந்து வருகிறது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி, இந்தியாவில் பல்வேறு ஈர்க்கும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. கவாஸாகி நிறுவனம் சார்பாக, இந்தியாவில் அடுத்து இசட்250எஸ்எல் என்ற வாகனம் தான் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Kawasaki Motors India has imported their Estrella motorcycle to Indian shores. Estrella by Kawasaki when launched in India, would compete with Royal Enfield. Kawasaki Estrella has 249cc single-cylinder, air-cooled engine. In order to be competitive in pricing, Kawasaki will locally assemble Estrella in India. To know more about Estrella motorcycle, check here...
Story first published: Saturday, April 30, 2016, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X