கவாஸாகியின் இசட்எக்ஸ்-10ஆர், இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் சார்பாக இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-14ஆர் ஆகிய சூப்பர்பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தனர்.
புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

2016-ஆம் ஆண்டிற்கான மாடல்கள்;
கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், தொடர்ந்து பல்வேறு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 2016-ஆம் ஆண்டிற்காக இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-14ஆர் ஆகிய 2 சூப்பர்பைக் மாடல்களை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்கின்றனர்.

விற்கபடும் விதம்;
கவாஸாகி இந்தியா, இந்த 2 மாடல்களையும் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் (முழுவதுமாக கட்டி முடிக்கபட்ட) வடிவத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

ஜப்பானில் உற்பத்தி;
இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-14ஆர் ஆகிய 2 சூப்பர்பைக்குகள் ஜப்பானில் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த 2 மாடல்களும் இந்திய வாகன சந்தைகளுக்கு இறக்குமதி செய்யபட்டு வழங்கபடுகிறது.
கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், முன்னதாகவும், இந்த 2 சூப்பர்பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. ஆனால், தற்போது 2016 இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் 2016 இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர்பைக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பிற மாற்றங்கள்;
2016 இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் 2016 இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர்பைக் மாடல்களுக்கும், பல்வேறு தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
மேலும், சிறந்த சூப்பர்பைக் இயக்கும் அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், இந்த இரு மாடல்களிலும் உள்ள ஏரோடைனமிக் பேக்கேஜ்கள் மேம்படுத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;
2016 இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் 2016 இசட்எக்ஸ்-14ஆர் ஆகிய 2 சூப்பர்பைக் மாடல்களின் இஞ்ஜின்களுக்கும் எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யபடவில்லை.

கிடைக்கும் வண்ணங்கள்;
2016 இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர்பைக், ஆல்-பிளாக் (முழுமையான கருப்பு நிறம்) மற்றும் ட்யூவல்-டோன் கிரீன் பெயிண்ட் ஸ்கீம்களில் மட்டுமே கிடைக்கிறது.
2016 இசட்எக்ஸ்-10ஆர் சூப்பர்பைக், எக்ஸ்குளுசிவ் பிளாக் மற்றும் கிரீன் பெயிண்ட் ஸ்கிம்களுடன் கிடைக்கிறது. மேலும், இது ஸ்பெஷல் டீகேல்களை கொண்டிருக்கும்.

விலை விவரங்கள்;
2016-ஆம் ஆண்டிற்காக அறிமுகம் செய்யபடும் இந்த 2 சூப்பர்பைக் மாடல்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
2016 இசட்எக்ஸ்-10ஆர் சூப்பர்பைக் - 16.4 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் பூனே)
2016 இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர்பைக் - 17.9 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் பூனே)

டெலிவரி;
2016 இசட்எக்ஸ்-10ஆர் சூப்பர்பைக் மற்றும் 2016 இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர்பைக்குகள், இவற்றிற்கான முழு பனத்தையும் கட்டி முடுத்தபின், சுமார் 25 நாட்களுக்கு பிறகு தான் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
கவாஸாகி இசட்800 பைக்கின் முதல் கேரள பெண் உரிமையாளர்!
கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்- 10ஆர் சூப்பர் பைக் அறிமுகம் - விபரம்
கவாஸாகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








