கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டது. ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கவாஸாகி நிறுவனம் தங்களின் நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்;

ஸ்பெஷல் எடிஷன்;

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய மோட்டார்சைக்கிளின் பெயர் கவாஸாகி நின்ஜா 300 கேஆர்டி எடிஷன் ஆகும். இந்த கேஆர்டி என்பது கவாஸாகி ரேசிங் டீம் என்பதனை குறிக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

முன்னதாக, கவாஸாகி நிறுவனம், இந்த கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளில் மற்றொரு ஸ்பெஷல் எடிஷனை, கடந்த நவம்பர் 2015-ல் அறிமுகம் செய்தது.

நிறம்;

நிறம்;

கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் கேஆர்டி ஸ்பெஷல் எடிஷன், பிளாக் மற்றும் கிரீன் பெயின்ட் வேலைப்பாடு கொண்டுள்ளது. இந்த பெயின்ட் வேலைப்பாடு, கவாஸாகியின் சூப்பர்பைக் ரேஸ் மிஷினில் இருந்து ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனின் ஃப்யூவல் கேப் மற்றும் ஃபேரிங்கின் கீழ் பகுதி, கேஆர்டி ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்களை கொண்டிருக்கும். இவை தான், இந்த கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் கேஆர்டி ஸ்பெஷல் எடிஷன் மாடலை வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்துகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனில், வேறு எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கவாஸாகி நின்ஜா 300 கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனில், அதே பேரலல் ட்வின் 296 சிசி, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 38.4 பிஹெச்பியையும், அதிகப்படியாக 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

கவாஸாகி நின்ஜா 300 கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;

சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;

சர்வதேச சந்தைகளில், கவாஸாகி நிறுவனம், இந்த கவாஸாகி நின்ஜா 300 கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனை ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் அளிக்கின்றனர்.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

ஆனால், இந்திய வாகன சந்தைகளுக்கான கவாஸாகி நின்ஜா 300 கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனில், ஏபிஎஸ் வசதி தேர்வு முறையில் கூட வழங்கப்படவில்லை. இந்த ஏபிஎஸ் வசதி, 2017-ஆம் ஆண்டில் ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.

புக்கிங்;

புக்கிங்;

கவாஸாகி டீலர்ஷிப்கள், ஏற்கனவே இந்த கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் கேஆர்டி ஸ்பெஷல் எடிஷனின் புக்கிங்கை ஏற்க துவங்கிவிட்டனர்.

விலை;

விலை;

கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் கேஆர்டி ஸ்பெஷல் எடிஷன், இந்தியா முழுவதும் 3.61 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கப்படுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

ஃபேஸ்புக் மூலமாக பைக்கை விற்க முயன்ற கேடிஎம் உரிமையாளர் கொடூர கொலை!

அமெரிக்க அதிபருக்கான புதிய விமானத்தை தயாரிக்கும் போயிங்!

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து: துபாய் களமிறங்கியது!

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
India Kawasaki Motors has launched Ninja 300 in special edition avatar called all-new Ninja 300 KRT Edition. 'KRT' stands for Kawasaki Racing Team. KRT Edition Ninja 300 motorcycle receives Black and Green paint job, which has been adopted from Kawasaki's World Superbike race machine. Kawasaki dealerships have already started accepting bookings. To know more, check here...
Story first published: Wednesday, October 5, 2016, 17:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X