கவாஸாகியின் புதிய நின்ஜா ஹெச்2, ஹெச்2ஆர் மற்றும் ஹெச்2 கார்பன் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

கவாஸாகி நிறுவனம், தங்களின் பொலிவு கூட்டப்பட்ட புதிய நின்ஜா ஹெச்2, ஹெச்2ஆர் மற்றும் ஹெச்2 கார்பன் ஆகிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்கள் மிக கோலாகலாமாக கொண்டாடபட்டு வருகிறது. இந்த நிலையில், ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கவாஸாகியின் புதிய மோட்டர்சைக்கிள்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய மோட்டார்சைக்கிள்கள்;

புதிய மோட்டார்சைக்கிள்கள்;

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் புதிய நின்ஜா ஹெச்2, லிமிட்டெட் எடிஷன் நின்ஜா ஹெச்2 கார்பன் மற்றும் டிராக்கை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெச்2ஆர் ஆகியவற்றை தற்போது அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கவாஸாகி நின்ஜா ஹெச்2 மற்றும் ஹெச்2ஆர் ஆகிய 2 மாடல்களிலும் ஒரே இஞ்ஜின் கொண்டுள்ளது. இவை, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் மற்றும் சூப்பர் சார்ஜ்ட் மோட்டார் உடைய 998 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 2 விதமான டியூனிங்கில் கிடைக்கிறது.

கவாஸாகி நின்ஜா ஹெச்2 மாடல் 197 பிஹெச்பியையும், ஹெச்2ஆர் 310 பிஹெச்பியையும் வெளிப்படுத்துகிறது.

கூறுகள்;

கூறுகள்;

கவாஸாகி நின்ஜா ஹெச்2 மற்றும் ஹெச்2ஆர், ட்ரெல்லிஸ் ஃபிரேம், ஏரோடைனமிக் பாடிவர்க், ஒன்-சைடட் ஸ்விங் ஆர்ம், ப்ரெம்போ உள்ளிட்ட கூறுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

2016-ஆம் ஆண்டிற்கான நின்ஜா ஹெச்2 மாடலில், புதிய அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் சேர்க்கப்பட்டுள்ளது. இது, முந்தைய மாடலை காட்டிலும், லிவர் பிரஷரை 40% சரியான முறையில் கட்டுப்படுத்தவும், ஆக்கிரோஷமான டவுன்ஷிஃப்ட்களை செயல்படுத்த உதவுகிறது.

கவாஸாகியின் புதிய நின்ஜா ஹெச்2, ஹெச்2ஆர் மற்றும் ஹெச்2 கார்பன் இந்தியாவில் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட 2017 நின்ஜா ஹெச்2 மற்றும் ஹெச்2ஆர் மாடல்களில், ஐஎம்யூ எனப்படும் இநெர்ஷியல் மெஷர்மன்ட் யூனிட், கேடிஆர்சி எனப்படும் மேம்படுத்தப்பட்ட கவாஸாகி டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கிஐபிஸ் எனப்படும் கவாஸாகி இன்ட்டெல்லிஜென்ட் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கிய கவாஸாகியின் எலக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் கொண்டுள்ளது.

கவாஸாகியின் புதிய நின்ஜா ஹெச்2, ஹெச்2ஆர் மற்றும் ஹெச்2 கார்பன் இந்தியாவில் அறிமுகம்

கவாஸாகி நின்ஜா ஹெச்2 மற்றும் ஹெச்2ஆர் ஆகிய 2 மாடல்களும், சமீபத்திய மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்ட மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம்கள், க்விக் ஷிஃப்டர்கள் மற்றும் கவாஸாகியின் ஜெனியுன் ஆக்ஸசரீஸ் மூலம் டெயிலர்ட் எர்கானமிக்ஸ் கொண்டுள்ளது. எர்கோ-ஃபிட் ரெயிஸ் செய்யப்பட்ட ஹேண்டில்பார் கிட மூலம் உரிமையாளர்கள் இவற்றின் ரைடிங் பொசிஷனை கஸ்டமைஸ் செய்து கொள்ள உதவுகிறது.

கவாஸாகியின் புதிய நின்ஜா ஹெச்2, ஹெச்2ஆர் மற்றும் ஹெச்2 கார்பன் இந்தியாவில் அறிமுகம்

சஸ்பென்ஷன் பணிகள் ரியரில், ஆஹ்லின்ஸ் டிடிஎக்ஸ் ஷாக் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

கவாஸாகியின் புதிய நின்ஜா ஹெச்2, ஹெச்2ஆர் மற்றும் ஹெச்2 கார்பன் இந்தியாவில் அறிமுகம்

மேலும், இந்த கவாஸாகி நின்ஜா ஹெச்2 மற்றும் ஹெச்2ஆர் ஆகிய 2 மாடல்களும் பேங்க் ஆங்கிள் டிஸ்பிளே மற்றும் மேக்ஸ் பேங்க் ஆங்கிள் ரெகார்டிங் பங்க்ஷன் உடைய மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்டேஷன் கொண்டுள்ளன. இந்த மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்டேஷன் உடன் மேம்பட்ட பூஸ்ட் இன்டிக்கேட்டர் மற்றும் ஒரு ஐஎம்யு இன்டிக்கேட்டர் கொண்டுள்ளது.

ஹெச்2;

ஹெச்2;

ரோட் லீகல் எனப்படும் சட்டத்திற்கு உட்பட்ட ஹெச்2, தற்போது கார்பன் ஃபைபர் அப்பர் கவுள் உடைய நின்ஜா ஹெச்2 கார்பன் என்ற லிமிட்டெட் எடிஷன் மாடலில் கிடைக்கிறது.

இந்த ஹெச்2 கார்பன் முதன் முதலாக பேரிஸ் மோட்டார் ஷோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

மாடிப் படியில் ஏறும் மாயஜால வீல் சேரை தயாரிக்கும் டொயோட்டா!

டால்கோ ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது... மணிக்கு 220 கிமீ வேகம் வரை இயக்க வாய்ப்பு!

கார் கலெக்ஷனிலும் அக்ஷய் குமார் கில்லாடிதான்... !!

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki announced that, they have launched Ninja H2, limited edition Ninja H2 Carbon, and track focused H2R in India. upgraded 2017 Ninja H2 and H2R come with changes such as Kawasaki's electronics package that now combines the Inertial Measurement Unit (IMU), updated Kawasaki Traction Control (KTRC), and Kawasaki Intelligent Anti-Lock Braking System (KIBS). To know more, check here..
Story first published: Monday, October 17, 2016, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X