கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக், இந்தியாவில் புதிய வண்ணத்தில் அறிமுகம்

Written By:

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக், இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ள கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ண தேர்வு...

புதிய வண்ண தேர்வு...

கவாஸாகி இந்தியா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் வெர்சிஸ் 1000 பைக்கை, மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் உடைய மெட்டாலிக் ரா டைடேனியம் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த மாடல் பெரும் பிளாக் பெயிண்ட் ஸ்கீமில் மட்டும் தான் வழங்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் விஷயத்தில், கடந்த ஆண்டு மாடலை ஒப்பிடுகையில், இந்த புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 அட்வென்சர் பைக்கில் எந்த விதமான மாற்றங்களும் செய்யபடவில்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 அட்வென்சர் பைக், இன்லைன் 4-சிலிண்டர்கள் உடைய 1,043 சிசி அளவிலான லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 118 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 101 என்எம் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

எடை;

எடை;

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக், அதிசயிக்கதக்க வகையில், 250 கிலோ கிராம் எடை கொண்டுள்ளது.

தாமதமான நுழைவு...

தாமதமான நுழைவு...

மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் உடைய மெட்டாலிக் ரா டைடேனியம் நிறம் கொண்ட கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக், சர்வதேச சந்தைகளில் கடந்த ஆண்டே அறிமுகம் செய்யபட்டுவிட்டது.

துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் கூடுதல் நிறத்தில் தற்போது தான், 2016-ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தபட்ட வடிவமாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.

வருங்கால மேம்பாடுகள்;

வருங்கால மேம்பாடுகள்;

தற்போது, இந்தியாவில் உள்ள வெவ்வேறு கவாஸாகி மாடல்களும் இந்த 2016-ஆம் ஆண்டில் மேம்படுத்தபடும் என தகவல்கள் வெளியாகிறது.

கவாஸாகி வெர்சிஸ் 650 பைக், தற்போது கருப்பு நிறத்தில் மட்டுமே விற்பனை செய்யபடுகிறது. இது கூடுதலாக வேறு ஒரு நிறத்தில் அறிமுகம் செய்யபடலாம்.

விலை;

விலை;

மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் உடைய மெட்டாலிக் ரா டைடேனியம் நிறத்தில் அறிமுகம் செய்யபடும் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கிற்கு கூடுதல் விலை விதிக்கபடுவதில்லை.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக், 13.28 லட்சம் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவில் கவாஸாகி வெர்சிஸ் 1000 விற்பனைக்கு வந்தது - விபரம்!

புதிய கவாஸாகி வெர்சிஸ் பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

கவாஸாகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Kawasaki India Motors has launched an all-new colour option in their Versys 1000 model. This new colour option is called Metallic Raw Titanium with Metallic Spark Black. Design wise, this adventure bike has no differences from last year's model. 2016 Versys 1000 by Kawasaki costs around Rs. 13.28 lakh ex-showroom (Mumbai). To know more, check here...
Story first published: Tuesday, April 12, 2016, 13:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark