கேடிஎம் ஆர்சி200 மற்றும ஆர்சி390 பைக்குகளுக்கான விசேஷ பாடி கிட் அறிமுகம்!

கேடிஎம் ஆர்சி200 மற்றும் கேடிஎம் ஆர்சி390 பைக்குகளுக்கான விசேஷ பாடி கிட்டை ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

By Saravana Rajan

கேடிஎம் 1190 ஆர்சி8 பைக் உலக அளவில் பைக் பிரியர்களை கவர்ந்த சூப்பர் பைக் மாடல். கடந்த 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த சூப்பர் பைக் மீது பைக் பிரியர்களுக்கு எப்போதும் தனி கவனம் உண்டு. இந்த பைக்கில் இருக்கும் 173 பிஎச்பி பவரை அளிக்க வல்ல1195சிசி எஞ்சின் செயல்திறனில் வியக்க வைத்து வருகிறது.

இந்த நிலையில், கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை கேடிஎம் ஆர்சி8 சூப்பர் பைக் போன்று மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

ஆம், கேடிஎம் ஆர்சி390 பைக்கை ஆர்சி8 பைக் போன்று மாற்றி அழகு பார்ப்பதற்கான வாய்ப்பை ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் வழங்குகிறது. ஆர்சி8 பைக்கில் இருக்கும் டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில் ஆர்சி390 பைக்கில் பல மாறுதல்களை செய்து அசத்தி இருக்கிறது.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

ஆர்சி8 போன்ற பாடி பேனல்களுடன் தோற்றம் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ரெட்புல் ரேஸிங் நிறுவனத்தின் லோகோ, கேடிஎம் பிராண்டு சின்னத்துடன் பெயிண்ட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த விசேஷ பாடி கிட்டை ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகளில் எளிதாக பொருத்த முடியும். அதாவது, ஃப்ரேமில் எந்த மாற்றங்களும் செய்ய தேவையில்லை.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

கேடிஎம் ஆர்சிஎக்ஸ் என்ற பெயரில் இந்த பாடி கிட் அழைக்கப்படுகிறது. ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 செலவு செய்தால் இந்த பாடி கிட்டை வாங்கி பொருத்த முடியும்.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

மேலும், ஆட்டோலாக் டிசைன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புரொட்டோடைப் மாடலில் கூடுதல் செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் எஞ்சின் மற்றும் இசியூ கம்ப்யூட்டரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பிஎம்சி ஏர் ஃபில்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

கேடிஎம் ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்கில் இந்த விசேஷ பாடி கிட்டை பொருத்தும்போது வெறும் 3 கிலோ எடை மட்டுமே கூடுதலாகும். இந்த பைக்கிற்கு கார்பன் மற்றும் ரேஸ் வெர்ஷன் பாடி கிட்டுகளை பயன்படுத்தும்போது ஒன்று முதல் நான்கு கிலோ எடை குறையும் என்று ஆட்டோலாக் டிசைன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

வெறும் 50,000 இருந்தாலும் போதும்... உங்க கேடிஎம் பைக்கும் இப்படி மாறிடும்!

கார்பன் ஃபைபர் உதிரிபாகங்களை தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோலாக் டிசைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த கார்பன் ஃபைபர் பாடி கிட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஆ"்டோலாக் டிசைன்ஸ் தெரிவித்துள்ளது. இது மிகவும் உறுதியாகவும், இலகு எடை கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Autolog Designs have developed a KTM RCX kit inspired by the RC8 motorcycle which can be bolted to the RC390/200.
Story first published: Thursday, December 29, 2016, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X