நவ.8ல் அறிமுகமாகும் புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள்!

Written By:

இந்திய இளைஞர்கள் மத்தியில் கேடிஎம் ட்யூக்200 மற்றும் ட்யூக் 390 பைக் மாடல்கள் மிகவும் விருப்பமானதாக இருக்கின்றன. ஸ்டைல், செயல்திறன், விலை என அனைத்திலும் மிகச் சரியான சாய்ஸ்.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ட்யூக் 200 மற்றும் 390 பைக் மாடல்களை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நவ.8ல் அறிமுகமாகும் புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள்!

வரும் 8ந் தேதி இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடைபெற இருக்கும் EICMA மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

நவ.8ல் அறிமுகமாகும் புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள்!

இதற்காக, டீசர் வீடியோ ஒன்றை தற்போது கேடிஎம் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. புதிய ட்யூக் 390 பைக்கின் ஹெட்லைட் மட்டுமே தெரியும் விதத்தில் அந்த வீடியோ வந்துள்ளது.

நவ.8ல் அறிமுகமாகும் புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள்!

அடுத்த ஆண்டு இந்த புதிய ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதனுடன் சேர்த்து ட்யூக் 200 பைக்கும் விற்பனை வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ.8ல் அறிமுகமாகும் புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள்!

புதிய ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள் தவிர்த்து, புதிய 800சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சினையும் கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ.8ல் அறிமுகமாகும் புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள்!

தற்போது விற்பனையில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் கொண்ட ட்யூக் 690 பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, புதிய ட்யூக் 125சிசி நேக்டு ஸ்டைல் பைக் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது உடனடியாக இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.

English summary
KTM is set to take centre stage at the upcoming EICMA motorcycle show in Milan with the New Duke 390 And 200.
Please Wait while comments are loading...

Latest Photos