'மேட் இன் இந்தியா' சுஸுகி ஹயபுசா அறிமுகம்... விலை ரூ.2.38 லட்சம் குறைந்தது

Written By:

ரூ.13.57 லட்சம் விலையில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சுஸுகி ஹயபுசா பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

உலகின் மிக பிரபலமான சூப்பர் பைக் மாடலான சுஸுகி ஹயபுசாவை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், தற்போது விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலமாக, போட்டியாளர்களை விட மிககுறைவான விலையில் இந்த சூப்பர் பைக்கை வாங்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

இதுவரை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தாயகமான ஜப்பானிலிருந்து இந்த சூப்பர் பைக் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த சூப்பர் பைக்கை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது சுஸுகி. இரண்டு மாடல்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது என்று சுஸுகி தெரிவித்துள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் ஆலையில்தான் சுஸுகி ஹயபுசா பைக் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, இங்கு அசெம்பிள் செய்யப்படும்.

விலை குறைந்தது

விலை குறைந்தது

இதுவரை ரூ.15.95 லட்சம் விலையில் சுஸுகி ஹயபுசா இறக்குமதி செய்து விற்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது மேட் இன் இந்தியா சுஸுகி ஹயபுசா பைக் ரூ.13.57 லட்சம் என்ற அளவில் விலை குறைந்துள்ளது. அதாவது, ரூ.2.38 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.

தொழில்நுட்ப சமாச்சாரம்

தொழில்நுட்ப சமாச்சாரம்

தொழில்நுட்ப விஷயங்களில் மாறுதல்கள் இல்லை. இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்மாக 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ்

மைலேஜ்

266 கிலோ எடையுடைய இந்த சூப்பர் பைக் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

சுஸுகி ஹயபுசா பைக் மணிக்கு 299 கிமீ வேகத்தை தொடக்கூடிய வல்லமை பொருந்தியது. இது அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது.

முன்பதிவு

முன்பதிவு

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் புதிய சுஸுகி ஹயபுசா பைக்கிற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுவிட்டதாக சுஸுகி தெரிவித்துள்ளது.

போட்டி

போட்டி

சுஸுகி ஹயபுசாவிற்கு நேரடி போட்டியாளராக கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர் சூப்பர் பைக் உள்ளது. இந்த சூப்பர் பைக் ரூ.17.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கைவிட சுஸுகி ஹயபுசா ரூ.4.33 லட்சம் குறைவான விலையில் தற்போது கிடைப்பது வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பப்படுகிறது.

 
English summary
Suzuki Motorcycles India confirms that they have commenced local assembly of the Hayabusa. The superbike is now priced attractively at Rs. 13.57 lakh ex-showroom (Delhi).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark