லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

லோஹியா நிறுவனம், ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

லோஹியா ஓமாஸ்டார்...

லோஹியா ஓமாஸ்டார்...

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் தயாரித்து வழங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

லைசன்ஸ் தேவையில்லை;

லைசன்ஸ் தேவையில்லை;

பிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் போல், லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இயக்க லைசன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு (இ-ஸ்கூட்டர் --- e-scooter), 250W பிர்ஷ்லஸ் டிசி மோட்டார் பொருத்தபட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மோட்டார், 20Ah பேட்டரி பேக்குடன் இணைக்கபட்டுள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோமீட்டர் தூரம் வரை செல்லலாம். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆகலாம்.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்குகள், அல்லாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் மற்றும் இதன் உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ், கரடுமுரடான இந்திய சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஃபியரி ரெட், மாச்சோ பிளாக், ஸ்பிரிட்டட் கிரே மற்றும் வைட் ஆகிய 4 நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து, லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆயுஷ் லோஹியா, மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், "நாங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் தேவைகளை சரியாக புரிந்து கொள்கிறோம். இதனால், மக்கள் தேவையான போக்குவரத்து சாதனங்கள் உருவாக்கி வழங்குகிறோம். லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் பைக் செக்மன்ட்டில் சிறந்த மதிப்பு கூட்டும் வாகனமாகவும், சுற்றுசூழல் பிரச்னைகளை சமாளிக்கும் சரியான ஸ்கூட்டராக இருக்கும்" என ஆயுஷ் லோஹியா தெரிவித்தார்.

உற்பத்தி;

உற்பத்தி;

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காஷிப்பூர் உற்பத்தி ஆலையில் தயார் செய்யப்படுகிறது.

விலை;

விலை;

பூஜ்ஜியம் மாசு உமிழ்வு கொண்ட லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 40,850 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லோஹியா ஆட்டோவின் நரைன் இ-ரிக்ஷாக்கள் இந்தியாவில் அறிமுகம்

ரூ.25,495 விலையில் புதிய இ-ஸ்கூட்டர்: லோஹியா அறிமுகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Lohia Auto Industries has launched their Lohia OMAstar electric scooter in India. Like other electric scooters and bikes, Lohia OMAstar can be ridden without acquiring driving license. This e-scooter is available in 4 different colours — Fiery Red, Macho Black, Spirited Gray and White. This zero-emissions scooter is priced at Rs. 40,850. To know more, check here...
Story first published: Friday, July 8, 2016, 18:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark