லூடோவிக் லாஸரேத் வடிவமைத்த புதிய லாஸரேத் எல்எம் 847 க்வாட் பைக் அறிமுகம்

Written By:

க்வாட் பைக் ஃப்ரேமில் உருவாக்கப்பட்ட அசத்தலான புதிய லாஸரத் எல்எம் 847 பைக், ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பைக்கில் அசுரத்தனமாக ஆற்றலை வழங்க வல்ல 470 ஹெச்பி மஸராட்டி வி8 இஞ்ஜின் யன்படுத்தப்பட்டிருக்கிறது.

வித்தியாசமாக காட்சி அளிக்கும் இந்த லாஸரேத் எல்எம் 847 பைக் குறித்த கூடுதல் தகவல்கள வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

லூடோவிக் லாஸரேத் பற்றி...

லூடோவிக் லாஸரேத் பற்றி...

லூடோவிக் லாஸரத், உலக அளவில் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்களை வடிவமைப்பாளர் ஆவார்.

அவரிடம் இருந்து தயாரிப்புகள் வெளியிடபட்டு நீண்ட காலம் ஆகியது. சமீபத்தில் லூடோவிக் லாஸரத் வடிவமைத்து வெளியிட்ட இந்த லாஸரத் எல்எம் 847 பைக் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸரத் எல்எம் 847 பைக் பற்றி...

லாஸரத் எல்எம் 847 பைக் பற்றி...

லாஸரத் எல்எம் 847 பைக், பார்த்த உடனே ஈர்க்கவைக்கும் வகையிலான பைக்காக உள்ளது.

இதன் தோற்றம் சற்று நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற யோசனையை தோன்ற வைக்க வைத்தாலும், இதன் ஸ்டைல் பார்த்த உடனே வியக்க வைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லாஸரத் எல்எம் 847 பைக்கின் முக்கியமான அம்சமே இதனுடன் இணைக்கபட்ட மஸராட்டி இஞ்ஜின் தான் என கூறப்படுகிறது.

லாஸரத் எல்எம் 847 பைக், வி8, 32-வால்வ் பவர் பிளாண்ட் 4.691 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

மஸராட்டி இஞ்ஜின் கொண்ட லாஸரத் எல்எம் 847 பைக், 7,000 ஆர்பிஎம்களில் 470 ஹார்ஸ்பவரை வெளிபடுத்துகிறது.

டார்க்;

டார்க்;

லாஸரத் எல்எம் 847 பைக், ஒரு நிமிடத்திற்கு 4,750 ரெவ்-களில் 620 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக் தேவைபட்டால், எந்த விதமான வேகத்திலும், எந்த கியரிலும் ரப்பரை கூட உருக்கும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன் குறித்து யோசித்தால், இது மிகவும் எளிமையான டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இந்த லாஸரத் எல்எம் 847 பைக், ஹைட்ராளிக் கப்ளர் மற்றும் ட்யூவல் செயின் டிரைவ் கொண்ட சிங்கிள் ஸ்பீட் கியர்பாக்ஸ் மட்டுமே கொண்டுள்ளது.

இதற்கு பொருள் யாதெனில், நின்ற நிலையில் இருந்து அந்தமே இல்லாமல், கியர்களை ஷிஃப்டே செய்யாமல் பயணித்து கொண்டே இருக்கலாம். இது நன்மை பயக்கும் விஷயமா அல்லது தீமை பயக்கும் விஷயமா என்பது, இதனை இயக்குபவரை பொருத்ததாக மாறக்கூடும்.

டெய்ல்;

டெய்ல்;

லாஸரத் எல்எம் 847 பைக், டுகாட்டி பனிகேல் டெய்ல் கொண்டுள்ளது. இதன் டெய்ல் அமைப்பு, இந்த பைக்குடன் கச்சிதமாக ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

இதர அமைப்புகள்;

இதர அமைப்புகள்;

லாஸரத் எல்எம் 847 பைக், ட்யூவல்-வீல் ஹப் செண்டர் ஸ்டீயரிங் ப்ரண்ட் எண்ட் கொண்டுள்ளது. இது டாட்ஜ் டோமாஹாக் போலவே காட்சியளிக்கிறது.

இது போன்ற ஸ்பெஷலான பைக்கிற்கு வேறு எந்த விதமான இஞ்ஜினியரிங் தேர்வுகளையும் கண்டுபிடிப்பது கடினமாகும். இதனால், இந்த பைக்கின் அசல்தன்மையை மையமாக கொண்டு, இது குறித்து எந்த விதமான தீர்மானமும் செய்ய கூடாது.

டுகாட்டி 1299 பனிகேல் டெய்ல் கொண்ட இது, இதன் தோற்றத்திற்கு கூடுதல் அழகை கூட்டுகிறது.

லீனிங் மிஷின்;

லீனிங் மிஷின்;

லாஸரத் எல்எம் 847 பைக்கின் மிக வித்தியாசமான அம்சமே, இது லீனிங் மிஷன் (சாய்ந்து கொண்டு இயக்க கூடிய பைக்) ஆகும்.

டிஎஃப்எக்ஸ் கொண்ட லாஸரத் எல்எம் 847 பைக்கின் சஸ்பென்ஷன் சிஸ்டம், இதனை சாலைகளில் பாதுகாப்பாக இயங்கி கொண்டிருக்க உதவுகிறது.

பிரேக்;

பிரேக்;

லாஸரத் எல்எம் 847 பைக்கின் பிரேக்குகள் இயக்கம், 420 மில்லிமீட்டர் டயாமீட்டர் கொண்ட 2 பெரிமீட்டர் ப்ரெம்போ ரோட்டார்களால் செயல்படுகிறது.

லாஸரத் எல்எம் 847 பைக்கின், ஃப்ரண்ட்-டில் 8-பாட் நிஸ்ஸின் கேளிப்பர்கள் உள்ளது. இதன் ரியரில் 255 மில்லிமீட்டர் ப்ரெம்போ ரோட்டார்கள் மற்றும் 4-பாட் கேளிப்பர்கள் பொருத்தபட்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

லாஸரத் எல்எம் 847 பைக்கின் டிராக் பார் தேர்வு அவ்வளவு சிறந்தது என கூற இயலாது. மேலும், இதன் பார்-எண்ட் ரிவர்ஸ்-மவுண்ட் ஹேண்ட் கண்ட்ரோல்கள் அனைவருக்கும் பிடிதிருப்பது கடினம்.

லாஸரத் எல்எம் 847 பைக், ரிஃஜோமா நிறுவனத்தின் லிவர்கள் மற்றும் மிரர்கள் (கண்ணாடி) கொண்டுள்ளது.

லூடோவிக் லாஸரத், இந்த லாஸரத் எல்எம் 847 பைக்கிற்கு, மிஷிலின் பவர் கப் ப்ரோ ரப்பர் டயர்கள் வழங்கியுள்ளார்.

எடை;

எடை;

லாஸரத் எல்எம் 847 பைக், மொத்தம் 400 கிலோகிராம் எடை கொண்டுள்ளது.

இப்படிபட்ட எடை கொண்டிருந்தாலும், சிறப்பான பவர்-டூ-வெய்ட் ரேஷியோ கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா தொடர்புடைய செய்திகள்

ஹார்லி டேவிட்சன் தொடர்புடைய செய்திகள்

ராயல் என்ஃபீல்டு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
An Insane Lazareth LM 847 Bike has been released. This Lazareth LM 847 Bike Uses a 470 HP Maserati V8 Engine. It is designed by the world renowned Automobile Designer Ludovic Lazareth. It comes with a total mass of 400 kg. It has a Ducati Panigale tail. It has levers and mirrors from Rizoma and fitted with Michelin Power Cup Pro rubber tyres.
Story first published: Thursday, March 3, 2016, 9:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark