மஹிந்திரா ஜென்ஸீ 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

அமெரிக்காவில், புதிய மஹிந்திரா ஜென்ஸீ 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருகிறது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்திய இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2,999 டாலர் விலையில் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கலிஃபோர்னியாவின், ஓக்லேண்டில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஓக்லேண்ட் மேயர் லிப்பி சாஃப், ஃப்ரீமாண்ட் மேயர் பில் ஹாரிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புதிய ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மஹிந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மஹிந்திரா குழுமத்தின் அங்காமன ஜென்ஸீ என்ற ஸ்டார்ட்- அப் நிறுவனம்தான் இந்த புதிய ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கிறது. சிலிக்கான் வேலியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் இந்த ஸ்கூட்டர் உருவாகியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு மஹிந்திரா ரேவா எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருக்கிறது.

அர்பன் ஸ்கூட்டர்

அர்பன் ஸ்கூட்டர்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறத்திற்கான சிறந்த போக்குவரத்து சாதனமாக இதனை மஹிந்திரா ஜென்ஸீ நிறுவனம் தெரிவித்துள்ளது. பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, நவீன கட்டுப்பாட்டு வசதிகள் இந்த ஸ்கூட்டரின் வெகுவாக கவரும் அம்சங்களாக இருக்கும்.

ஒற்றை இருக்கை

ஒற்றை இருக்கை

மாணவர்கள், அலுவலகம் செல்வோருக்கு ஏற்ற ஸ்கூட்டர் மாடலாக இதனை வடிவமைத்திருப்பதாக ஜென்ஸீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒருவர் பயணிப்பதற்கான இருக்கை வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தொடுதிரை

தொடுதிரை

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருக்கு பதிலாக 7 இஞ்ச் தொடுதிரை கொண்ட சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி இருக்கும் சார்ஜ் மற்றும் வேகம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம். ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதியுடன், ஜிபிஎஸ், நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன்களை யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

ரிமோட் ரிப்பேர் வசதி

ரிமோட் ரிப்பேர் வசதி

தந்தியில்லா முறையில், ஸ்கூட்டரில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகளை கண்டறியும் வசதியும் உண்டு. அத்துடன், அடையாளம் தெரியாத நபர்கள் ஸ்கூட்டரை எடுக்க முயன்றால், அது குறித்து உரிமையாளரின் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் வசதியும் உண்டு.

ரேஞ்ச், வேகம்

ரேஞ்ச், வேகம்

பேட்டரியை முழமையாக சார்ஜ் செய்துவிட்டால், 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேபோன்று, அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டரை வாங்கி பயன்படுத்த துவங்கியிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், அலுவலகத்திற்கு பஸ்சில் செல்லும்போது 37 நிமிடங்கள் ஆகும். தற்போது இந்த ஸ்கூட்டரில் 25 நிமிடங்களில் சென்று விடுவதாக தெரிவித்துள்ளார்.

உற்பத்தி

உற்பத்தி

அமெரிக்காவின், மிக்சிகன் நகரின் அன் அர்போர் என்ற இடத்தில் 56,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில்தான் இந்த புதிய ஸ்கூட்டர் அசெம்பிள் செய்யப்படுகிறது. கலிஃபோர்னியா, ஒரேகான், புளோரிடா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra has launched the all- new electric scooter GenZe 2.0 in California, US.
Story first published: Saturday, January 16, 2016, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X