மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், க்ரிம்ஸன் மேட் வண்ணத்தில் விரைவில் அறிமுகம்

Written By:

மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், க்ரிம்ஸன் மேட் வண்ணத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா மோஜோ பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா மோஜோ..

மஹிந்திரா மோஜோ..

மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வழங்கும் மஹிந்திரா ஸ்போர்ட்ஸ் மோஜோ பைக், முன்னோடி இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இதன் செக்மன்ட்டில், நேரடி போட்டிக்கு எந்த பைக்கும் இல்லாமல், இது தனித்துவத்தும் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், தற்போதைய நிலையில் 3 வண்ணங்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா மோஜோ, மஹிந்திரா ரேசிங் ரெட் அன்ட் வைட், பிளாக் மற்றும் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

புதிய நிறம்;

புதிய நிறம்;

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது க்ரிம்ஸன் மேட் மற்றும் மஞ்சள் (எல்லோ) ஆகிய வண்ணங்களிலும் காணப்பட்டது.

விரைவில், மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், க்ரிம்ஸன் மேட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆனால், மஹிந்திரா மோஜோவின் கூறுகள் ஃபிளாட் பிளாக் ஸ்கீமில் உள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

க்ரிம்ஸன் மேட் வண்ணத்தில் வெளியாக உள்ள மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், மிரட்டும் வகையில் உள்ளது.

இது வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்த்து, விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், 295 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 26.83 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 30 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

எக்ஸ்ஹாஸ்ட்;

எக்ஸ்ஹாஸ்ட்;

சிறப்படையாளம் கொண்ட எக்ஸாஸ்ட் வழங்கும் நோக்கில், மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கில் 2-இன்-1 சிஸ்டம் ஏற்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

தற்போதைய நிலையில், மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு நேரடியான போட்டி போல், எந்த 2 சக்கர வாகனங்களும் இல்லை.

எனினும், மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், ஹோண்ட சிபிஆர்250ஆர், கேடிஎம் 390 டியூக், ராயல் என்பீல்டு 350 ஆகிய மோட்டார்சைக்கிள்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க வேண்டும்.

விலை;

விலை;

புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கும், 1.63 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) டெல்லி விலையிலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

எதிர்பாராத விலையில் புதிய மஹிந்திரா மோஜோ விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மஹிந்திரா மோஜோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mahindra Two Wheelers will offer its Mahindra Mojo Sports Bike in an all-new and exclusive paint scheme. New colour option to be launched is called as Crimson Matte'. Remainder of Mojo components are in flat black scheme. Currently, Mahindra Mojo is available in 3 colour options - Mahindra Racing Red & White, Black, and white. To know more, check here...
Story first published: Friday, May 27, 2016, 19:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark