மஹிந்திரா டூ வீலர்களை பேடிஎம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்

Written By:

மஹிந்திரா நிறுவனத்தின் டூ வீலர்களை, வாடிக்கையாளர்கள் இனி பேடிஎம் இணையதளத்தில் உள்ள மஹிந்திரா ஆன்லைன் பிரான்ட் ஸ்டோர் மூலமாகவும் வாங்கலாம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் தயாரிப்புகளையும், தங்கள் தயாரிப்புகளின் விற்பனை முறைகளையும் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி கொண்டே வருகின்றனர்.

அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் தங்களின் டூ வீலர்களை பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து விற்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய விற்பனை முறை தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

முதல் தயாரிப்பு;

முதல் தயாரிப்பு;

மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம், அதன் ஆன்லைன் பிரான்ட் ஸ்டோர் மூலம் முதன் முதலாக மோஜோ பைக்கை விற்பனை செய்ய துவங்கியுள்ளது.

ஆன்லைன் புக்கிங்;

ஆன்லைன் புக்கிங்;

வாடிக்கையாளர்கள், இனி தங்களின் மஹிந்திரா மோஜோ பைக்கை, தங்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, வீடு அல்லது அலுவலத்தில் இருந்து புக்கிங் செய்து கொள்ளலாம். இதற்கான பேமன்ட்-டை கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் மேற்கொள்ளலாம்.

சிறப்பு சலுகை;

சிறப்பு சலுகை;

மஹிந்திரா மோஜோ பைக்கை, தற்போது பேடிஎம் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அறிமுக சலுகையாக ஒரு மேக்னேட்டிக் டேங்கு பேக் வழங்க்கப்படுகிறது.

புக்கிங் தொகை;

புக்கிங் தொகை;

மஹிந்திரா மோஜோ பைக்கை, பேடிஎம் மூலம் வாங்க 20,000 ரூபாய் புக்கிங் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

மஹிந்திரா மோஜோ பைக், சார்கோல் பிளாக், வால்கேனோ ரெட் மற்றும் கிலேஷியர் வைட் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கிறது.

விற்பனை செய்யப்படாத பைக்;

விற்பனை செய்யப்படாத பைக்;

மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம், ஆச்சர்யமூட்டும் வகையில், மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் பைக்கை பேடிஎம் மூலம் விற்பனை செய்யாமல் உள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா மோஜோ பைக்கிற்கு சிங்கிள் சிலிண்டர் உடைய 295 சிசி லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 26.45 பிஹெச்பியையும், 30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா மோஜோ பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மஹிந்திரா மோஜோ பைக், ஒரு லிட்டருக்கு 36 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான திறன் கொண்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

மஹிந்திரா மோஜோ பைக், பிரெல்லி டையாப்லோ ரோஸ்ஸோ II டயர்கள், டிஜிட்டல் / அனாலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ட்வின் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம், தலைகீழாக பொருத்தப்பட்ட பிரன்ட் போர்க்குகள் மற்றும் ட்வின் பாட ஹெட்லேம்ப்கள் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மஹிந்திரா மோஜோ பைக்கிற்கு நேரடி போட்டி போல் இந்தியாவில் எந்த வாகனமும் இல்லை. எனினும் ஹோண்டா சிபிஆர்250ஆர் மற்றும் கேடிஎம் 390 டியூக் மாடல்கள் இதற்கு போட்டி போல் விளங்குகிறது.

விலை;

விலை;

மஹிந்திரா மோஜோ பைக், 1.73 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்கப்படுகிறது.

English summary
Indian two-wheeler manufacturer Mahindra has launched its Online Brand Store via PayTM. Very first product to be offered via PayTM brand store will be Mojo. Booking amount of Rs. 20,000 will be accepted by PayTM. Customers purchasing Mahindra Mojo through PayTM will receive Magnetic Tank Bag, as part of their introductory offer. To know more, check here...
Story first published: Thursday, October 13, 2016, 7:03 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos