மஹிந்திராவின் மோஜோ டூரர் எடிஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், இந்த பண்டிகை காலத்திற்கு மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள், பண்டிகை காலங்களின் போது ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மஹிந்திரா நிறுவனமும், இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளனர்.

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்...

ஸ்பெஷல் எடிஷன்...

மஹிந்திரா நிறுவனம், இந்த பண்டிகை காலத்திற்கான பிரத்யேக மோஜோ மாடலை, டூரர் எடிஷனில் அறிமுகம் செய்துள்ளனர். மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிள், பல்வேறு தனித்துவமான ஆக்சஸரீஸ் கொண்டுள்ளது. இந்த மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிளாக மாற்ற இதற்கு பல்வேறு மதிப்பு கூட்டப்படும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறந்த தேர்வு;

சிறந்த தேர்வு;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிள், நெடுந்தூர ரைட்கள் மேற்கொள்ளும் இந்திய டூரிங் ஆர்வலர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

கூடுதல் ஆக்சஸரீஸ்;

கூடுதல் ஆக்சஸரீஸ்;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிளில், மேக்னட்டிக் டேங்க் பேக், சேடில் பேக், கேரியர், பேன்னியர் மவுன்ட், மொபைல் ஹோல்டர், ஃபாக் லேம்ப்கள் உள்ளிட்ட பல கூடுதல் ஆக்சஸரீஸ்கள் கொண்டுள்ளது.

நுணுக்கமான தேர்வு;

நுணுக்கமான தேர்வு;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிளில், ஒவ்வொரு ஆக்சஸரீஸ்களும் கூடுதல் அக்கறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்;

குறிக்கோள்;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட டூரிங் திறன்கள் உடைய மோட்டார்சைக்கிளை வழங்குவதே மஹிந்திரா நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது.

பலன்;

பலன்;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிளில், நெடுந்தூர பயணங்களுக்கு தேவையான அதிக அளவிலான லக்கேஜ் கொண்டு செல்ல முடியும்.

ஜாக்கெட்;

ஜாக்கெட்;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிளின் ரைடிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தும் வகையில், ஒரு டூரர் ஜாக்கெட்டையும் மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்த டூரர் ஜாக்கெட் மூலம் ரைடரின் பாதுகாப்பு மற்றும் ஸ்டைல் கூடுகிறது. மஹிந்திரா டீலர்ஷிப்கள், இந்த டூரர் ஜாக்கெட்டை அறிமுக ஆதாயமாக வழங்குகின்றனர்.

விலை;

விலை;

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் மோட்டார்சைக்கிள், 1.89 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Mahindra & Mahindra launched an all-new special edition model for this festive season. Mojo motorcycle is now offered in Tourer Edition. Additional equipment that will be offered with Mahindra's Mojo Tourer Edition are Magnetic Tank Bag, Saddle Bag, Carrier, Pannier Mount, Mobile Holder, and Fog Lamps. To know more on Mahindra's Mojo Tourer Edition, check here...
Please Wait while comments are loading...

Latest Photos