இந்த ஆண்டு மத்தியில் இந்தியா வரும் எம்வி அகஸ்டா ப்ரூடேல் 800 பைக்!

Written By:

எம்வி அகஸ்ட்டா ப்ரூடேல் 800 ஸ்ட்ரீட் ஃபைட்டர் இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யபட உள்ளது.

எம்வி அகஸ்ட்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவில் அடுத்து அறிமுகம் செய்யபட உள்ள எம்வி அகஸ்ட்டா ப்ரூடேல் 800 ஸ்ட்ரீட் ஃபைட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கைனடிக் நிறுவனத்துடன் கூட்டணி;

கைனடிக் நிறுவனத்துடன் கூட்டணி;

எம்வி அகஸ்ட்டா நிறுவனம், கைனடிக் இஞ்ஜினியரிங் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கொண்டு இந்திய சந்தைகளில் நுழைந்தது.

ஆரம்ப கட்டத்தில், இந்த நிறுவனம் 2 மோட்டார்சைக்கிளை மட்டுமே அறிமுகம் செய்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எம்வி அகஸ்ட்டா நிறுவனம், இது வரை இந்தியாவில் ஒரு ஷோரூமை கூட நிறுவவில்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

எம்வி அகஸ்ட்டா மூலம் தயாரிக்கபடும், ப்ரூடேல் 800 ஸ்ட்ரீட் ஃபைட்டர் மோட்டார்சைக்கிள் 798 சிசி, 3 சிலிண்டர்கள் உடைய, யூரோ4 அங்கிகாரம் பெற்ற லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 116 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 83 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், 8 நிலை டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் க்விக்-ஷிஃபடர் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

டீலர்ஷிப்களை நிறுவ திட்டம்;

டீலர்ஷிப்களை நிறுவ திட்டம்;

எம்வி அகஸ்ட்டா நிறுவனம், மும்பை, பூனே, டெல்லி மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களில் தங்களின் எக்ஸ்குளூஸிவ் டீலர்ஷிப்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கு வரும் மோட்டார்சைக்கிள்கள்;

இந்தியாவிற்கு வரும் மோட்டார்சைக்கிள்கள்;

இந்த இத்தாலிய பிராண்ட், தங்கள் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கபடும் அனைத்து மோட்டார்சைக்கிள் ரேன்ஜ்ககளையும் இந்தியாவிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

எனினும், இந்தியாவிற்குள் தங்கள் மோட்டார்சைக்கிளின் டெலிவரி துவக்குவதற்கு முன், இந்தியா முழுவதும் பரவலான முறையில் டீலர்ஷிப்களை நிறுவ எம்வி அகஸ்ட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

இந்த இத்தாலிய மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் ப்ரூடேல் 800 ஸ்ட்ரீட் ஃபைட்டர் மோட்டார்சைக்கிளை 2016-ஆண்டு மத்தியில் இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ப்ரூடேல் 800 மோட்டார்சைக்கிள் தான், இந்த நிறுவனம் சார்பாக இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் மிகவும் மலிவு விலை வாகனமாக உள்ளது.

கைனடிக் நிறுவனமும், எம்வி அகஸ்டா நிறுவனமும் இந்த மோட்டார்சைக்கிள்களை சிகேடி எனப்படும் கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட்களாக கொண்டு வந்து, அதை பிறகு இந்தியாவின் பூனேவில் அசம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

தற்போதைய நிலையில்,

எஃப்4 சூப்பர்பைக் - 25.5 லட்சம் ரூபாய்,

ப்ரூடேல் 1090 நேகட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் - 17.99 ரூபாய்,

என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

இந்த மோட்டார்சைக்கிள்கள், motoroyale.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே புக்கிங் செய்ய முடியும்.

English summary
MV Agusta Brutale 800 Street Fighter would be launched in India by Mid-2016. MV Agusta has made Kinetic Engineering as its official partner and entered into the Indian market. MV Agusta has not set up even a single showroom in India to directly fulfill needs of the customer.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark