எம்வி அகுஸ்ட்டா இந்தியாவில் பிரவேசம் - 3 சூப்பர்பைக்குகள் அறிமுகம்

By Ravichandran

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், முறைப்படி இந்தியாவில் பிரவேசம் செய்துள்ளது. இத்துடன், ஒரே நாளில் 3 சூப்பர் பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எம்வி அகுஸ்ட்டாவின் இந்திய பிரவேசம் மற்றும் 3 சூப்பர் பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் பிரவேசம்;

இந்தியாவில் பிரவேசம்;

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனமான எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், முறைப்படி இன்று (மே 11, 2016) இந்திய வாகன சந்தைகளில் பிரவேசம் செய்துள்ளது.

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், இந்தியாவின் பூனேவை மையமாக கொண்டு இயங்கும் கைனட்டிக் குரூப்புடன் கைகோர்த்து, உற்பத்தி, விற்பனை மற்றும் சர்வீஸ் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மோட்டோராயல் ஷோரூம்;

மோட்டோராயல் ஷோரூம்;

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், தாங்கள் இந்தியாவில் வழங்கும் 3 சூப்பர் பைக்குகளையும் மோட்டோராயல் என்று பெயர் சூட்டபட்டுள்ள எக்ஸ்குளுசிவ் ஷோரூம்கள் மூலம் தான் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்ய உள்ளனர்.

இந்தியாவில், முதல் எக்ஸ்குளுசிவ் மோட்டோராயல் ஷோரூம், பூனேவில் மே 12, 2016-ல் திறக்கபட உள்ளது.

கூடுதல் ஷோரூம்கள்;

கூடுதல் ஷோரூம்கள்;

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், அடுத்த 2 மாதங்களில், இந்தியா முழுவதும் பரவலாக 5 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

எம்வி அகுஸ்ட்டா-வின் இந்த எக்ஸ்குளுசிவ் மோட்டோராயல் ஷோரூம்கள், சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், மும்பை மற்றும் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் திறக்கபடும்.

அறிமுகம் செய்யபட்ட மாடல்கள்;

அறிமுகம் செய்யபட்ட மாடல்கள்;

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், தற்போது எம்வி அகுஸ்ட்டா எஃப்4, எம்வி அகுஸ்ட்டா எஃப்3 மற்றும் ப்ரூடேல் 1090 ஆகிய 3 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த 3 சூப்பர் பைக்குகளையும், எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், தங்களின் எக்ஸ்குளுசிவ் மோட்டோராயல் ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்கிறது.

எம்வி அகுஸ்ட்டா எஃப்4;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 சூப்பர் பைக், எஃப்4 மற்றும் எஃப்4 ஆர்ஆர் ஆகிய இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 சூப்பர் பைக், 998 சிசி, 4-சிலிண்டர்கள் உடைய இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 195 ஹெச்பி மற்றும் 111 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

எஃப்4 - விலை;

எஃப்4 - விலை;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 சூப்பர் பைக், 26.87 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 சூப்பர் பைக்கின் எஃப்4 ஆர்ஆர் வேரியண்ட்டும், எஃப்4 வேரியண்ட்டில் உபயோகிக்கபடும் அதே 998 சிசி, 4-சிலிண்டர்கள் உடைய இஞ்ஜினே உபயோகிக்கபடுகிறது.

ஆனால், அதே இஞ்ஜின் இந்த வேரியண்ட்டில், 201 ஹெச்பி திறனை வெளிபடுத்துகிறது.

எஃப்4 ஆர்ஆர் - உச்சபட்ச வேகம்;

எஃப்4 ஆர்ஆர் - உச்சபட்ச வேகம்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 சூப்பர் பைக்கின் எஃப்4 ஆர்ஆர் வேரியண்ட், உச்சபட்சமாக மணிக்கு 297.5 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.

எஃப்4 ஆர்ஆர் - விலை;

எஃப்4 ஆர்ஆர் - விலை;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 சூப்பர் பைக்கின் எஃப்4 ஆர்ஆர் வேரியண்ட், 35.71 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

எம்வி அகுஸ்ட்டா எஃப்3 - இஞ்ஜின்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்3 - இஞ்ஜின்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்3 சூப்பர் பைக், 798 சிசி, 3-சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் உடையதாக உள்ளது.

இதன் இஞ்ஜின், 148 ஹெச்பியையும், 88.1 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஃப்3 - உச்சபட்ச வேகம்;

எஃப்3 - உச்சபட்ச வேகம்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்3 சூப்பர் பைக், உச்சபட்சமாக மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.

எஃப்3 - விலை;

எஃப்3 - விலை;

எம்வி அகுஸ்ட்டா எஃப்3 சூப்பர் பைக், 16.78 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 1090 - இஞ்ஜின்;

எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 1090 - இஞ்ஜின்;

எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 1090 சூப்பர் பைக், நேக்கட் பைக் வகையை சார்ந்ததாகும்.

இதன் இஞ்ஜின் 144 ஹெச்பியையும், 112 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ப்ரூடேல் 1090 - விலை;

ப்ரூடேல் 1090 - விலை;

எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 1090 சூப்பர் பைக், 20.10 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

எம்வி அகுஸ்ட்டா 1090 ஆர்ஆர் - விலை;

எம்வி அகுஸ்ட்டா 1090 ஆர்ஆர் - விலை;

எம்வி அகுஸ்ட்டா 1090 ஆர்ஆர் சூப்பர் பைக், 24.78 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் பைக்கின் முதல் இந்தியா வாடிக்கையாளரானார் பெனெல்லி தலைவர்!

எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கின் உற்பத்தி விரைவில் துவக்கம்?

எம்வி அகுஸ்ட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக் - கூடுதல் படங்கள்

எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக் - கூடுதல் படங்கள்

எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக் - கூடுதல் படங்கள்

Most Read Articles

English summary
Italian superbike maker MV Agusta has officially entered India. Also, it has launched 3 Superbikes namely - F4, the F3 and Brutale 1090. MV Agusta would sell and service its bikes through its exclusive Motoroyale showrooms. MV Agusta has partnered with Pune based Kinetic Group to sell and service its bikes in India. To know more about MV Agusta, check here...
Story first published: Wednesday, May 11, 2016, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X