எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கின் உற்பத்தி விரைவில் துவக்கம்?

Written By:

எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கின் உற்பத்தி இந்த ஆண்டில் துவங்க உள்ளது.

எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஏஎம்ஜி ஜிடி பிரபாவம் கொண்ட எஃப்3?

ஏஎம்ஜி ஜிடி பிரபாவம் கொண்ட எஃப்3?

இந்த எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பிரபாவம் கொண்டுள்ளது.

முன்னதாக, இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம் இந்த சூப்பர் பைக்-கை, இத்தாலியில் மிலன் என்ற இடத்தில் நடைபெற்ற 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தியது.

சோலார் பீம் நிறம்...

சோலார் பீம் நிறம்...

எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கிற்கு, சோலார் பீம் என்ற ஒரு ஸ்பெஷலான வண்ணம் ஏற்று கொள்ளபட்டுள்ளது. இதே நிறம் தான், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சூப்பர்காரிலும் காணபட்டது.

காட்சிபடுத்தபடும் போது உபயோகிக்கபட்ட இதே நிறம் தான், உற்பத்திக்கு உபயோகிக்க உள்ளதாக இந்த நிறம் உறுதிபடுத்தியது.

கூட்டணியை கொண்டாடுவதற்கு...

கூட்டணியை கொண்டாடுவதற்கு...

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சூப்பர்காரில் உபயோகிக்கபட்ட அதே நிறமே, இந்த எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கிலும் உபயோக்கிக்கபடுவதற்கு முக்கிய காரணம், 2 நிறுவனங்களுக்கு இடையே உருவாகிய புதிய கூட்டணியை கொண்டாடுவதற்காக தான் என எம்வி அகஸ்டா தெரிவித்துள்ளது.

உற்பத்தி துவக்கம்?

உற்பத்தி துவக்கம்?

சோலார் பெயிண்ட் ஸ்கீம் உடன் உருவாகும், எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கின் உற்பத்தி 2016-ஆம் ஆண்டிலியே துவக்கபட உள்ளது.

டீலர்ஷிப்களில் டிஸ்பிளே;

டீலர்ஷிப்களில் டிஸ்பிளே;

பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் சுமார் 127 ஏஎம்ஜி டீலர்ஷிப்கள் உள்ளது. இந்த 127 ஏஎம்ஜி டீலர்ஷிப்களிலும், எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக் டிஸ்பிளே செய்யபடும்.

கூடுதல் விலை?

கூடுதல் விலை?

இந்த எக்ஸ்குளுசிவ், பெயிண்ட் ஸ்கீம் கொண்ட எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கிற்கு, இந்த இத்தாலிய கார் நிறுவனம்

கூடுதல் விலை நிர்ணயிக்க உள்ளதா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் கூட்டணி;

இந்தியாவில் கூட்டணி;

இந்தியாவை பொருத்தவரை, எம்வி அகஸ்டா நிறுவனம் இந்திய வாகன சந்தைகளுக்கான நடவடிக்கைகளுக்கு கைனட்டிக் குழுமத்துடன் கைகோர்த்துள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

எம்வி அகஸ்டா நிறுவனம் மற்றும் கைனட்டிக் குழுமம் ஒன்றாக இணைந்து சில மோட்டார்சைக்கிள்களை தயாரித்துள்ளன.

இந்த 2 சக்கர வாகனங்களை, அதிகாரப்பூர்வ இணையளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம்.

ஷோரூம்கள்?

ஷோரூம்கள்?

இது வரை, இந்த எம்வி அகஸ்டா நிறுவனம், ஒரு ஷோரூமை கூட இந்தியாவில் திறக்கவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லூயிஸ் ஹாமில்டன் பெயரில் ஸ்பெஷல் எடிசன் எம்வி அகுஸ்ட்டா பைக் அறிமுகம்!

எம்வி அகஸ்டா எஃப்4 சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

எம்வி அகஸ்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
MV Agusta F3 Solar Beam Edition enters the Production stage in this 2016. Earlier, MV Agusta showcased the F3 superbike, which is inspired by the Mercedes AMG GT at the 2015 EICMA Motor Show In Milan. This F3 superbike is given a special colour called Solar Beam, which is given for the Mercedes AMG GT supercar also.
Story first published: Saturday, January 30, 2016, 12:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark