எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் பைக்கின் முதல் இந்தியா வாடிக்கையாளரானார் பெனெல்லி தலைவர்!

By Ravichandran

டிஎஸ்கே பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷிரிஷ் குல்கர்னி தான், எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை பெற்ற முதல் இந்திய வாடிக்கையாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஷிரிஷ் குல்கர்னி வாங்கிய எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா...

இந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா...

இத்தாலிய சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனமான எம்வி அகுஸ்ட்டா, இந்தியாவில் தற்போது தான் முறையாக தனது தடத்தை பதித்துள்ளது. அதாவது, தற்போது தான் முறையாக, தங்கள் நிறுவனத்தின் சார்பாக, ஷோரூமை ஸ்தாபித்துள்ளது.

எம்வி அகுஸ்ட்டா ஷோரூம் முகவரி;

எம்வி அகுஸ்ட்டா ஷோரூம் முகவரி;

எம்வி அகுஸ்ட்டா ஷோரூம் முகவரி;

டி1 பிளாக்,

ப்ளாட் 18/2 எம்ஐடிசி சிஞ்ச்வாட்,

பூனே,

இந்தியா

இந்தியாவில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்கள்;

எம்வி அகுஸ்ட்டா, இந்தியாவில் ஏராளமான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய நிலையில், எஃப்3 800, எஃப்4, ப்ரூடேல் 1090 உள்ளிட்ட ஏராளமான மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

முதல் மோட்டார்சைக்கிளின் டெலிவரி;

முதல் மோட்டார்சைக்கிளின் டெலிவரி;

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் வழங்கும் எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை பெறும் முதல் இந்திய வாடிக்கையாளர் என்ற பெருமையை, டிஎஸ்கே பெனெல்லி இந்தியாவின் சேர்மேன் ஷிரிஷ் குல்கர்னி பெற்றுள்ளார்.

எம்வி அகுஸ்ட்டா இந்தியாவின் மேனேஜிங் டைரக்டரான அஜிங்க்யா ஃபிரோதியா அவர்களே முன் இருந்து, இந்த எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை ஷிரிஷ் குல்கர்னியிடம் டெலிவரி வழங்கினார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள், எம் அகுஸ்ட்டாவின் 998 சிசி, இன்லைன் 4-சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், அபாரமான 201 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 111 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் இனிமையான வாகனம் இயக்கும் அனுபவத்தை வழங்குவதற்கு, எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளுக்கு எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் ஏராளமான ரைடிங் எய்ட்ஸ்களை (வாகனம் இயக்கும் சாதனங்களை) வழங்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் (சூப்பர்பைக்), 4 இஞ்ஜின் மேப்புகள் மற்றும் ஒரு 8-நிலை டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டுள்ளாது.

மேலும், இதில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் கூடிய ஷிஃப்டர் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளுக்கு ஆஹ்லின்ஸ் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டியரிங் டேம்பர் ஆகிய நவீன சாதனங்கள் பொருத்தபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

இத்தாலிய சூப்பர் பைக்கான எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர், இந்திய சந்தைகளில் டுகாட்டி நிறுவனத்தின் மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், இந்த எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை 35.5 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் பூனே) என்ற அறிமுக விலையில் விற்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

எம்வி அகஸ்டா எஃப்4 சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

எம்வி அகஸ்டா எஃப்3 சோலார் பீம் எடிஷன் சூப்பர்பைக்-கின் உற்பத்தி விரைவில் துவக்கம்?

எம்வி அகுஸ்ட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
DSK Benelli India Chairman, Shirish Kulkarni has become first Indian owner of MV Agusta F4 RR Motorcycle. MV Agusta recently commenced its Indian operation and set up its showroom in Pune. It would have to compete with likes of Ducati. MV Agusta F4 RR is offered at special introductory price of Rs. 35.5 lakh ex-showroom (Pune).
Story first published: Tuesday, March 8, 2016, 0:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X