2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

சுஸுகி நிறுவனத்தின் தங்களின் அடுத்த தயாரிப்பான 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

தற்போது அறிமுகம் ஆகியுள்ள 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 சுஸுகி ஆக்செஸ் 125...

2016 சுஸுகி ஆக்செஸ் 125...

2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், ஆர்வத்துடன் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இதன் தோற்றம், மக்களிடையே ஆர்வத்தை கூட்டி வருகிறது. இது கடந்த மாதம் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 8.9 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 10 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், ஒரு லிட்டருக்கு 64 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளதாக சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.

எஸ்இபி டெக்னாலஜி எனப்படும் சுஸுகி ஈக்கோ பெர்ஃபார்மன்ஸ் தொழில்நுட்பத்தினால் தான், இத்தகைய அளவிலான மைலேஜ் சாத்தியமாகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் முன் பகுதியில் 120 மில்லிமீட்டர் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பொருத்தபட்டுள்ளது.

தற்போது கிடைக்கும் வசதிகள்;

தற்போது கிடைக்கும் வசதிகள்;

தற்போதய நிலையில், ஸ்டீல் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்குகள் கொண்ட 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

அல்லாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் கொண்ட புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், வெகு சீக்கிரத்தில் அறிமுகம் செய்யபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டருக்கு, சுஸ்கி நிறுவனம் ரெட்ரோ டிசைனை ஏற்றுகொண்டுள்ளது.

இதன் முன்பகுதியில் உள்ள வட்ட வடிவ ஹெட்லேம்ப்களுக்கு குரோம் பூச்சு வழங்கபட்டுள்ளது. இது பழங்காலத்தை ஞாபகபடுத்தும் விதத்தில் உள்ளது.

புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டருக்கு புதிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் பேனல் வழங்கபட்டுள்ளது.

இதன் இண்டிகேட்டர்களும் மறுவடிவமைக்கபட்டுள்ளது. இது முன்பை விட தற்போது பெரியதாகவும், ஆங்குலார் தோற்றம் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும், பார்க்கிங் விளக்குகள் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் டெய்ல்லேம்ப்களும் மறுவடிவமைக்கபட்டு ஸ்கூட்டரின் ரியர் பகுதியை மறைக்கும் வகையில் உள்ளது.

மேலும், இதன் டெய்ல்லேம்ப்கள் கிளியர் கிளாஸ் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், மொத்தம் 5 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், பியர்ல் சுஸுகி டீப் புளூ நம்பர் 2, கேண்டி சொனோமா ரெட், மெட்டாலிக் மேட் ஃபைப்ராயின் கிரே, பியர்ல் மிராஜ் வைட் மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், இனி இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா சுஸுகி ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி;

போட்டி;

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் வெஸ்பா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய 2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், 53,887 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இருந்து கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சுஸுகி நிறுவனத்தின் புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், மார்ச் 15-ஆம் தேதி அறிமுகம்

ஆக்செஸ் தொடர்புடைய செய்திகள்

சுஸுகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Suzuki has launched their next product - 2016 Suzuki Access 125 scooter In India. Suzuki has adopted Retro look for this 2016 Suzuki Access 125 scooter. With the help of Suzuki Eco Performance (SEP) technology, this new Scooter gives a mileage of 64km/l. The prices of 2016 Access 125 starts from Rs. 53,887 ex-showroom (Delhi). To know more, check here...
Story first published: Tuesday, March 15, 2016, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X