புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ...

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரை, புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் என்ற மேம்படுத்தபட்ட வடிவத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இது இந்த நிறுவனம் வழங்கும் மிகவும் விலை குறைந்த ஸ்கூட்டர் ஆகும்.

7-வது வாகனம்;

7-வது வாகனம்;

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் ஆனது, 2016-ஆம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யும் 7-வது வாகனம் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், 110 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் ஹெச்இடி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 8 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.74 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், உச்சபட்சமாக மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், தேர்வு முறையிலான காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (Combi Brake System (CBS)) வசதியுடன் வெளியாகிறது.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், பெரிய அளவிலான மெக்கானிக்கல் அல்லது தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரை ஈர்க்கதக்க மற்றும் புதுமையுடன் வழங்கும் நோக்கில், ஹோண்டா நிறுவனம் இதை 3 புதிய வண்ணங்களில் வழங்கியுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்ட் வேரியன்ட், பிளாக் மற்றும் பியர்ல் அமேசிங் வைட் ஆகிய நிற தேர்வுகளில் கிடைக்கிறது.

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், ஸ்டாண்டர்ட் வேரியன்ட்டில், பியர்ல் ட்ரான்ஸ், கேண்டி ஜாஸ்ஸி புளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

டீலக்ஸ் ரேஞ்ச்சில், ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், பியர்ல் அமேசிங் வைட், ஆர்சிட் பர்பிள் மெட்டால்லிக் மற்றும் இம்பீரியல் ரெட் மெட்டால்லிக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

விலை குறைந்த வாகனம்;

விலை குறைந்த வாகனம்;

ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஸ்கூட்டர்களிலேயே, 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் தான் மிகவும் குறைந்த விலை கொண்டுள்ளது.

எனினும், வேறு செக்மன்ட்டில் வழங்கப்படும் ஹோண்டா நவி தான் ஹோண்டா நிறுவனம் வழங்கும் வாகனங்களிலேயே மிகவும் விலை குறைந்த வாகனாமாக உள்ளது.

விலை;

விலை;

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர், 50,255 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2015 ஹோண்டா ஆக்டிவா ஐ மற்றும் ஏவியேட்டர்!

புதிய ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஹோண்டா

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

English summary
Honda Motorcycle and Scooter India has launched the updated version of their Activa-i model Scooter named as New 2016 Activa-i Scooter. 2016 Activa-i is the Seventh two-wheeler which is launched in this calendar year by Honda. This New 2016 Activa-i Scooter is available in three more new colours. To know more about 2016 Activa-i Scooter, check here...
Story first published: Tuesday, May 24, 2016, 20:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark