ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்ற சட்டம் அமல்படுத்தபட்டுள்ளது

Written By:

ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்ற சட்டம், சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரேஞ்ச் பகுதியில் அமல்படுத்தபட்டுள்ளது.

சத்திஸ்கர் போலீஸ் கட்டுபாட்டின் கீழ் உள்ள ராய்பூர் ரேஞ்ச் பகுதிக்கு உட்பட்ட 6 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் சேர்ந்து இந்த சட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் படி, இந்த 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும், ஹெல்மெட் இல்லாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் வழங்க வேண்டாம் என்ற வகையில் நோட்டீஸ் வழங்கபட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கையை, ராய்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஹெனரல் (ஐஜி) ஜிபி சிங், வெகுவாக வரவேற்றுள்ளார். சமீப காலமாக, ஹெல்மெட் இல்லாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் துறையினரால், ஏராளமான இன்னல்கள் வழங்கபட்டு வந்தது. இது தொட்ரபாக ஐஜி ஜிபி சிங், விசாரணை நடத்த சொல்லி, 2 தினங்களுக்குள் பதில் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கியுள்ளார்.

no-helmet-no-petrol-rule-in-raipur-in-Chhatisgarh

எனினும், உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் முக்கிய சதுக்கங்களில் மட்டுமல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் ஷாப்பிங் மால்கள், பேருந்து நிறுத்தங்கள், ஆகிய இடங்களுக்கும் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், தங்கள் துறையினர் மேற்கொள்ளும் இந்த ஒழுங்கு நடவடிக்கைகளை விரிவு செய்ய ஐஜி ஜிபி சிங் கேட்டு கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், ஐஜி ஜிபி சிங் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். அப்போது "ஹெல்மெட் அணிந்து செல்வது மிகவும் அவசியமான ஒன்றாகவும், கட்டாயமான ஒரு விஷயமாக மக்கள் உணர வேண்டும். கொலை சம்பவங்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் 5 மடங்கு அதிகமாக உள்ளது. அதிலும், 70% இறப்புக்கள் தலையில் ஏற்படும் காயங்களினால் தான் நிகழ்கிறது" என தெரிவித்தார்.

English summary
'No Helmet, No Petrol' Rule has been imposed in Raipur. This effort has been carried out in a bid to crack down on riders who are riding without helmets. The District Collectors of 6 districts in Chhatisgarh, which fall under Raipur range of Chhatisgarh police, have issued notice to petrol pump owners to impose 'no helmet, no petrol' rule. To know more, check here...
Story first published: Wednesday, March 30, 2016, 10:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark