புதிய சூப்பர்பைக்குடன் மறு பிரவேசம் செய்யும் நார்டன்

By Ravichandran

நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் புதிய வி4 சூப்பர்பைக்கின் அறிமுகம் மூலம் மறுபிரவேசம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நார்டன் மோட்டார்சைக்கிள் கம்பெனி (Norton Motorcycle Company), இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் என்ற இடத்தை மையமாக கொண்டு இயங்கும் மோட்டார்சைக்கிள் பிரான்ட் ஆகும்.

நார்டன் மோட்டார்சைக்கிள் கம்பெனி, முன்னதாக நார்டன் மோட்டார்ஸ் லிமிட்டெட் (Norton Motors, Ltd.) என்று அழைக்கபட்டது. நார்டன் மோட்டார்சைக்கிள் கம்பெனி, 1898-ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தயாரிக்கும் வி4 சூப்பர்பைக் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் வி4 சூப்பர்பைக், 1200 சிசி கொள்ளளவு உடைய வி4 இஞ்ஜின் கொண்டதாக இருக்கும் என 2015-ல் அறிவிக்கப்பட்டது.

இந்த இஞ்ஜின், 200 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

லிமிட்டெட் எடிஷன்;

லிமிட்டெட் எடிஷன்;

நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த வி4 சூப்பர்பைக், லிமிட்டெட் எடிஷன் போல் தயாரிக்கப்படும்.

இந்த வகையில் மொத்தம் 200 சூப்பர்பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.

டீஸர்;

டீஸர்;

சமீபத்தில் தான், நார்டன் நிறுவனம், இந்த வி4 சூப்பர்பைக்கின் கான்செப்ட் மாடல் படத்தை தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மக்களை டீஸ் செய்தது.

அறிமுகம்;

அறிமுகம்;

வி4 சூப்பர்பைக், இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் மோட்டார்சைக்கிள் லைவ் 2016 (Motorcycle Live 2016) என்ற நிகழ்ச்சியின் போது அறிமுகம் செயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற திட்டம்;

பிற திட்டம்;

இதற்கிடையில், நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஐல் ஆஃப் மேன் டிடி மோட்டார்சைக்கிளை போலவே மற்றொரு 650 சிசி மோட்டார்சைக்கிளையும் வடிவமைத்து வருகிறது.

இந்த மோட்டார்சைக்கிளும் இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பத்தை பதிவு செய்யவும்;

விருப்பத்தை பதிவு செய்யவும்;

வி4 சூப்பர்பைக் மீது ஆர்வம் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் http://www.nortonmotorcycles.com/ என்ற அலுவல் ரீதியான இணையதளத்தில் , தங்களின் விருப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு இந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த வி4 சூப்பர்பைக்கின், சேஸி, கார்பன் ஃ பைபர் மூலம் செய்யப்பட்ட பெரும்பாலான பாடி ஒர்க், கையால் செய்யப்பட்டவையாக இருக்கும்.

இந்த வி4 சூப்பர்பைக், ஸ்ட்ரீட் மற்றும் டிராக் என் 2 வடிவங்களில் அறிமுகம் செய்யப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கவாஸாகியின் இசட்எக்ஸ்-10ஆர், இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் அகுலா 310 பைக், இந்தியாவில் விரைவில் அறிமுகம்?

ஸ்போர்ட்ஸ் பைக் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
Norton Motorcycle Company (formerly Norton Motors, Ltd.) is British motorcycle Brand originally from Birmingham, UK. Norton plans to make Comeback with New Superbike named as V4 SuperBike. This superbike, will feature 1200cc, V4 engine, which could produce 200bhp. Production will be limited to just 200 units of V4 Superbikes. To know more about V4 SuperBike, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X