ஓலா பைக் டேக்ஸி சேவை பெங்களூருவில் அறிமுகம்

Written By:

ஓலா பைக் டேக்ஸி சேவை பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த பைக் டேக்ஸிகளை ஓலா ஆப் உபயோகித்து புக் செய்து கொள்ளலாம். புக்கிங் செய்ய, அக்ரிகேட்டர் சார்ஜ் எனப்படும் தொகுப்பு கட்டணம், 30 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு, அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 2 ரூபாய் வசூலிக்கபடுகிறது.

ஓலா வழங்கும் பைக் டேக்ஸி சேவைக்கும், ஓலா கார் சேவைக்கு வழங்கபடும் அதே வசதிகள் வழங்கபடுகிறது. பைக் டேக்ஸி சேவைக்கும், டிரைவர் பற்றிய தகவல்கள், எஸ்ஓஎஸ், லைவ் டிராக்கிங் மற்றும் ஓலா மணி மூலம் கட்டணம் செலுத்தும் வசதி வழங்கபடுகிறது.

ஓலா பைக் டேக்ஸி புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட்டும் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ஓலாவின் உயர் அதிகாரியான பிரனே ஜிவ்ராஜ்கா, இந்த ஓலா பைக் டேக்ஸி சேவை அறிமுகம் செய்யபடுவதை குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். இது எந்த ஒரு நபரையும், அவர்கள் விரும்பும் இடத்திற்கு நிமடங்களில் கொண்டு சேர்த்துவிடும். அதுவும் பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில், இந்த சேவை மிகுந்த பயனளிக்கும் என கூறினார்.

ola-launched-ola-bike-taxi-service-in-bangalore

"ஓலா பைக் டேக்ஸி சேவை, குறைந்த விலைகளில் வழங்கபடுகிறது. நன்கு பயிற்சி பெற்ற ரைடர்கள் மூலம் இயக்கபடுவதால், பிள்ளியன் ரைட் (பைக்கின் பின்னால் அமர்ந்து செல்லுபவர்கள்) மேலும் பாதுகாப்பானதாக ஆகிறது. ஆரம்ப கட்டத்தில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் என நம்புகிறோம்.

வரும் வாரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தி, அதிக அளவிலான மக்களுக்கு சேவை வழங்க உத்தேசித்துள்ளோம். ஓலா பைக் டேக்ஸி போன்றதொரு சேவை, பில்லியனுக்கும் கூடுதலான மக்கள் கொண்ட இந்தியா போன்ற நாட்டில், போக்குவரத்து தொடர்பாக மேற்கொள்ளபட்ட மிகப்பெரிய நடவடிக்கை ஆகும்" என பிரனே ஜிவ்ராஜ்கா தெரிவித்தார்.

ஓலா நிறுவனத்தின் ஓலா பைக் டேக்ஸி சேவை திட்டமிட்டபடி நிறைவேறினால், இது மிகப்பெரிய வெற்றியாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு போன்ற நகரங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேறு ஒரு பயிற்சி பெற்ற ரைடர் வாகனம் இயக்கி அதில் நாம் செல்வது மிகுந்த அளவிலான நேரத்தை மிச்சபடுத்தும் என்பதை உறுதியாக கூறலாம்.

English summary
Ola Bike Taxi Service has been launched in Bangalore. To avail this service, taxi aggregator charges of Rs. 30/- as minimum fare and after that Rs. 2/- (as an introductory fare) per kilometer is charged. Ola Bike Taxis can be booked using the Ola app. The person who is booking for an Ola Bike Taxi is provided a helmet, during their travel.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more