1 லட்சம் ஹோண்டா ஷைன் எஸ்பி பைக்குகள் விற்கப்பட்டு சாதனை

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் அல்லது ஹெச்எம்எஸ்ஐ என்று அழைக்கப்படும் ஹோண்டா நிறுவனம், ஒரு லட்சம் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்குகளை விற்று சாதனை படைத்துள்ளது. சில நிறுவனத்தின் சில மாடல்கள் மக்களுக்கு பிடித்த அவை அதிக அளவில் விற்பனையாகி சாதனைகள் படைக்கின்றன.

அந்த வகையில் சிபி ஷைன் எஸ்பி மாடல், 1,00,000 பைக்குகள் என்ற விற்பனை சாதனையை எட்டியது தொடர்பான கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அமோகமான சாதனை;

அமோகமான சாதனை;

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஏராளமான தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. அதில், ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது. இதனால் தான், அறிமுகம் செய்யப்பட்ட 9 மாதங்களுக்குள் 1,00,000 பைக்குகள் என்ற விற்பனை சாதனையை எட்ட முடிந்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பொலிவு கூட்டப்பட்ட 124.7சிசி, 4 ஸ்ட்ரோக் இஞ்ஜின் கொண்டுள்ளது. ஹெச்இடி அல்லது ஹோண்டா இஞ்ஜின் டெக்னாலஜி உடைய இஞ்ஜின், இதன் கிளாசிலேயே மிக சிறந்த பவரை வெளிப்படுத்துகிறது.

இந்த ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி மாடலின் 124.7சிசி இஞ்ஜின் அதிகபட்சமாக 10.5 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகப்படியான வேகத்தில் அதிர்வுகளை குறைக்க உதவுகிறது.

பிரேக் சிஸ்டம்;

பிரேக் சிஸ்டம்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், ஈக்குவளைசர் உடைய சிபிசி எனப்படும் காம்பி-பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், நீண்ட சீட்கள், நீண்ட வீல்பேஸ், அதிகரிக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட்டிபில் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், டிஎல்எக்ஸ் (DLX), எஸ்டிடி (STD) மற்றும் சிபிஎஸ் (CBS) என்ற 3 வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், ஈர்க்கும் வகையிலான கிராஃபிக்ஸ்களுடன் கருப்பு, நீலம், சாம்பல், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் இரட்டை காயில் ஸ்பிரிங் கொண்ட சஸ்பென்ஷன், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி, ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற ஏராளமான வசதிகள் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ள அதிக மைலேஜ் தரும் திறன் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கருத்து படி, இந்த பைக், ஒரு லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தருகிறது.

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்கின் சாதனை குறித்து, ஹோண்டா நிறுவன உயர் அதிகாரி ஒய்.எஸ்.குலேரியா மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். மேலும், "ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் பாரம்பரியத்தை தொடரும் வகையில், ஹோண்டா சிபி ஷைன் பைக்கும், 125சிசி ரக பைக்கின் விற்பனைக்கு தோல் கொடுப்பதில் மிகுந்த பங்காற்றி வருகிறது.

1 லட்சம் திருப்தியான வாடிக்கையாளர்களின் பாராட்டு மற்றும் ஊக்கத்துடனும், கூடுதல் ஸ்போர்டியான ஸ்டைல், செயல்திறன், அம்சங்கள் மற்றும் ஈர்க்கும் தோற்றத்துடன், இந்த 125 சிசி செக்மென்ட்டில் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக், மிகவும் பிரத்யேகமான பைக்காக திகழ்கிறது" என ஒய்.எஸ்.குலேரியா தெரிவித்தார்.

English summary
Honda Motorcycles and Scooter India Pvt. Ltd. (HMSI) achieved huge milestone of one lakh CB Shine SP on road. Honda has achieved , this sales figures were achieved only after nine months after the launch of 125cc offering from Honda. This bike is offered in three variants, DLX, STD and CBS. Honda CB Shine SP is equipped with Honda Engine Technology (HET). To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos